/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
புதிய கலெக்டர் அலுவலக கட்டடத்தில் சிறிய குடிநீர் தொட்டி பற்றாக்குறையால் அல்லாடும் மக்கள்
/
புதிய கலெக்டர் அலுவலக கட்டடத்தில் சிறிய குடிநீர் தொட்டி பற்றாக்குறையால் அல்லாடும் மக்கள்
புதிய கலெக்டர் அலுவலக கட்டடத்தில் சிறிய குடிநீர் தொட்டி பற்றாக்குறையால் அல்லாடும் மக்கள்
புதிய கலெக்டர் அலுவலக கட்டடத்தில் சிறிய குடிநீர் தொட்டி பற்றாக்குறையால் அல்லாடும் மக்கள்
ADDED : மே 25, 2025 05:08 AM
விருதுநகர், : விருதுநகரில் கட்டப்பட்டுள்ள புதிய கலெக்டர் அலுவலகத்தில் உள்ள குடிநீர் தொட்டி 5 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்டு சிறிய தொட்டியாக இருப்பதால் அடிக்கடி குடிநீர் தீர்ந்து விடுகிறது. மீண்டும் ஆர்.ஓ., பிளான்ட்களுக்கு வர தாமதமாவதால் மக்கள் சிரமப்படும் சூழல் உள்ளது.
விருதுநகரில் புதிய கலெக்டர் அலுவலகம் ரூ.77.12 கோடியில் ஆறு தளங்களுடன் அமைந்துள்ளது. தரைத்தளத்தில் 132 இருக்கை வசதி கொண்ட குறைதீர் கூட்ட அரங்கம், 4ம் தளத்தில் கலெக்டர் அறை என அமைக்கப்பட்ட இந்த கட்டடம் 2024 நவ. 10ல் முதல்வர் ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்டது.
90 சதவீத அலுவலகங்கள் பழைய கலெக்டர் அலுவலகத்தில் இருந்து இங்கு இடமாற்றம் செய்யப்பட்டு விட்டன. பழைய கலெக்டர் அலுவலகத்திற்கு சுகாதாரத்துறை அலுவகங்களும் இடமாறுதலாகி வருகின்றன.
கட்டடம் செயல்பாட்டிற்கு வரும்போதே கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் இல்லை. இதனால் நிரந்த மின் இணைப்பு, மாசு கட்டுப்பாட்டு வாரிய சான்று தாமதமானது. தற்போது அனைத்தும் முடிந்து செயல்பாட்டிற்கு வந்துள்ள நிலையில், கட்டடங்களில் ஆணி அடிக்கும் போது செங்கல் உருவி வருவது போன்ற அச்சமூட்டும் செயல்கள் அரங்கேறி வருகின்றன. இதனால் மக்கள், அலுவலர்கள் அச்சப்படுகின்றனர்.
அலுவலகம் தரமின்றி கட்டப்பட்டுள்ளதாக அரசு ஊழியர்களே புலம்புகின்றனர். இந்நிலையில் இன்னொரு பிரச்னையாக குறைதீர் கூட்டத்தின் போது ஆர்.ஓ., பிளான்ட்களில் சரிவர குடிநீர் வரவில்லை. இதனால் அங்கு வந்த மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.
இதற்கு முக்கிய காரணம் 20 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு உள்ள குடிநீர் தொட்டி வைக்க வேண்டிய இடத்தில் 5 ஆயிரம் என்ற குறைவான கொள்ளளவு கொண்ட குடிநீர் தொட்டி வைத்துள்ளது தான். இது நிரம்பியதும், ஆர்.ஓ.,பிளான்டுகளில் குடிநீர் வர இன்னும் நேரம் எடுக்கிறது. இதனால் குடிநீருக்கு மக்கள் அங்குமிங்கும் அல்லாடினர். பழைய கலெக்டர் அலுவலகத்தில் அமைக்கப்பட்ட பிளான்டிலும் குடிநீர் வரவில்லை. மாவட்ட நிர்வாகத்தில் புதிய கலெக்டர் அலுவலகம் முதல்வரால் திறந்து வைக்கப்பட்ட போதிலும், இவ்வளவு அதிக அலட்சியங்கள் தொடர்கிறது.