/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
இரவு ரோந்தின்போது புதிய செயலிகளை பயன்படுத்த போலீசாருக்கு அறிவுறுத்தல்
/
இரவு ரோந்தின்போது புதிய செயலிகளை பயன்படுத்த போலீசாருக்கு அறிவுறுத்தல்
இரவு ரோந்தின்போது புதிய செயலிகளை பயன்படுத்த போலீசாருக்கு அறிவுறுத்தல்
இரவு ரோந்தின்போது புதிய செயலிகளை பயன்படுத்த போலீசாருக்கு அறிவுறுத்தல்
ADDED : பிப் 06, 2024 12:07 AM
அருப்புக்கோட்டை : புதிய குற்றங்களை கண்டுபிடிப்பதற்கு ஏற்ப காவல்துறைக்கு புதிய செயலிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. முக அடையாளத்தை வைத்து கண்டறியும் மென்பொருளை கண்டுபிடித்து உள்ளனர்.
இதனை வைத்து தனிநபரின் போட்டோவை ஸ்டேஷனில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள நபர்களின் போட்டோவுடன் ஒப்பிட்டு அடையாளம் கண்டறிய முடியும்.
எப்.ஆர். எஸ்., என்ற இந்த மென்பொருள் பற்றி 2021ல், இருந்து போலீசார்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
மாவட்டத்தில் உள்ள போலீசார் இந்த புதிய செயலியை முறையாக பயன்படுத்துவது இல்லை. இதை கண்காணித்த எஸ்.பி., பெரோஸ்கான் அப்துல்லா போலீசார், அதிகாரிகளுக்கு இந்த மென்பொருள் பற்றிய பயிற்சியை மீண்டும் அளிக்க உத்தரவிட்டார்.
இரவு நேரங்களில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபடும் போது இந்த செயலியை பயன்படுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.
இதனையடுத்து, அருப்புக்கோட்டை உட்கோட்டத்தில் உள்ள 7 ஸ்டேஷன்களை சேர்ந்த போலீசார், எஸ்.ஐ.,க்கள், இன்ஸ்பெக்டர்கள் ஆகியோருக்கு அருப்புக்கோட்டை தேவாங்கர் மேல்நிலைப்பள்ளியில் புதிய மென்பொருள் பயிற்சி, ஸ்மார்ட் காவலர் ஆப் உட்பட பயிற்சிகள் அளிக்கப்பட்டன.
பயிற்சியாளர் எஸ்.ஐ., சுமதி பயிற்சி அளித்தார். மாவட்ட முழுவதும் இந்த பயிற்சியை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.