sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 08, 2025 ,ஐப்பசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

போலீஸ் செய்திகள்

/

போலீஸ் செய்திகள்

போலீஸ் செய்திகள்

போலீஸ் செய்திகள்


ADDED : ஜன 26, 2024 05:01 AM

Google News

ADDED : ஜன 26, 2024 05:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குடிக்க பணம் கேட்டு தாக்குதல்

விருதுநகர்: அல்லம்பட்டியைச் சேர்ந்தவர் பாண்டியராஜா 45. இவரின் நண்பர் காமாட்சியிடம் ஜன. 23 இரவு 7:00 மணிக்கு மது குடிக்க பணம் கேட்டு நடந்த தகராறில் காமாட்சி தாக்கியதில் காயமடைந்து விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கிழக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.

மானபங்கம்: மேலாளர் மீது வழக்கு

விருதுநகர்: கடம்பன்குளத்தைச் சேர்ந்தவர் ஜெயசுதா 43. இவர் விருதுநகர் அரசு மருத்துவமனையில் தனியார் துப்பரவு பணியாளர் மேற்பார்வையாளராக உள்ளார். இவரை ஜன. 4 ல் மேலாளார் முத்துக்குமார் துாத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு பணிமாறுதல் செய்தார். இந்த பணியிட மாறுதல் ஆணையை கேட்டு மேலாளர் அலுவலகத்திற்கு வந்த போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஜெயசுதாவின் ஆடையை முத்துக்குமார் கிழித்தார். போலீசார் மேலாளர் முத்துக்குமார் மீது வழக்கு பதிந்தனர்.

கல்லுாரி மாணவி மாயம்

சாத்துார்: சாத்துார் நத்தத்துபட்டியை சேர்ந்தவர் வேல்முருகன் மகன் பாண்டியம்மாள், 19. சாத்துாரில் கல்லுாரியில் பி.ஏ.,3ம் ஆண்டு படித்து வந்தார். ஜன.23 கல்லுாரிக்கு சென்றவர் மாயமானார். போலீசார் விசாரிக்கின்றனர்.

ஆற்று மணல் திருடிய இருவர் கைது

சாத்துார்: சாத்துார் ஓ.மேட்டுப்பட்டியை சேர்ந்தவர் கருப்பசாமி, 35. சின்னக் கொல்லப்பட்டியை சேர்ந்தவர் ராஜசேகர், 30. இருவரும் வேனில் வைப்பாற்றில் மணலை திருடி வந்தனர். போக்குவரத்து நகர் விலக்கில் போலீசாரிடம் சிக்கினர். டிரைவர் கருப்பசாமி தப்பினார். ராஜசேகரை போலீசார் கைது செய்து மணலுடன் வேனையும் பறிமுதல செய்தனர். சாத்துார் தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.

மது பாட்டில்கள் பறிமுதல்

சிவகாசி: சிவகாசி அருகே கம்மாபட்டியைச் சேர்ந்தவர் தவமணி 23. இவர் அரசு மதுபான கடையில் மது பாட்டில்களை விலைக்கு வாங்கி அதில் சீலை உடைத்து தண்ணீர், போதை மாத்திரை கலந்து அதிக விலைக்கு விற்பனை செய்தார். எம்.புதுப்பட்டி போலீசார் அவரை கைது செய்து அவரிடம் இருந்து 274 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

* நரிக்குடி: நரிக்குடி இணக்கனேரி பகுதியில் கோரைக்குளம் கிராமத்தைச் சேர்ந்த முனியசாமி 28, விற்பனை செய்வது தெரிந்தது, அவரிடம் இருந்து 40 மது பாட்டில்களும், நரிக்குடி பனைக்குடியை சேர்ந்த சுந்தரத்திடமிருந்து 20 மது பாட்டில்கள் ரூ. 500 பறிமுதல் செய்த நரிக்குடி போலீசார் இருவரையும் கைது செய்தனர்.

----டூவீலர் விபத்து இருவர் காயம்

சிவகாசி: சிவகாசி எரிச்சநத்தம் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் ராமசாமி 63. இவர் தனது டூவீலரில் அழகாபுரி ரோட்டில் சென்ற போது அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ஜெகருள் இஸ்லாம் ஓட்டி வந்த டூவீலர் மோதியதில் இருவரும் காயம் அடைந்தனர். எம்.புதுப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.-----






      Dinamalar
      Follow us