ADDED : ஜன 27, 2024 05:27 AM
பஸ் மோதி பெண் காயம்
சிவகாசி: சிவகாசி பேர் நாயக்கன்பட்டியை சேர்ந்தவர் சந்திரசேகரன் 47. இவர் தனது சகோதரி பொன்னுத்தாயை 57, ஏற்றிக்கொண்டு டூவீலரில் மருத்துவமனைக்கு செல்வதற்காக சிவகாசி வந்தார். சிவகாசி ஏவிடி பள்ளி அருகே வரும்போது முன்னால் நின்றிருந்த காரில் மோதாமல் இருப்பதற்காக பிரேக் அடித்ததில் பொன்னுத்தாய் டூவீலரில் இருந்து தவறி கீழே விழுந்தார். அப்போது பின்னால் வந்து கொண்டிருந்த முத்துராஜ் ஓட்டி வந்த அரசு பஸ் பொன்னுத்தாயின் கையில் ஏறி இறங்கியது. டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.
கல்லால் தாக்குதல்
சிவகாசி: சிவகாசி திருத்தங்கல் ஆலாவூரணியை சேர்ந்தவர் முருகேசன் 60. வாட்ச்மேன் வேலை பார்த்து வரும் இவர் ஆலாவூரணி ரோட்டில் நின்ற போது காளிமுத்து நகரை சேர்ந்த வைரம் அவரை தகாத வார்த்தை பேசி கல்லால் அடித்து கொலை மிரட்ட விடுத்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.
டூ வீலர் விபத்து: ஒருவர் பலி
சாத்துார்: சாத்துார் படந்தல் வசந்தம் நகரை தேவகுமார், 52. ஜன.22 ல் டூவீலரில் (ஹெல்மெட் அணியவில்லை) சாத்துார் வந்தபோது நாகம்மாள் கோயில் அருகே நிலை தடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்தார் .மதுரை அரசு மருத்துவமனையில் பலியானார் சாத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.
பெண் வழுக்கி விழுந்து பலி
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை சின்ன புளியம்பட்டி செவல் கண்மாய் தெருவை சேர்ந்தவர் சுப்புத்தாய், 58, இவர் நேற்று முன்தினம் வீட்டினுள் இருந்த கழிப்பறைக்கு சென்ற போது, வழுக்கி விழுந்து இறந்தார். டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.--

