/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
தெருவின் நடுவில் மின்கம்பங்கள்; வாகனங்கள் செல்வதில் சிரமம்
/
தெருவின் நடுவில் மின்கம்பங்கள்; வாகனங்கள் செல்வதில் சிரமம்
தெருவின் நடுவில் மின்கம்பங்கள்; வாகனங்கள் செல்வதில் சிரமம்
தெருவின் நடுவில் மின்கம்பங்கள்; வாகனங்கள் செல்வதில் சிரமம்
ADDED : ஜன 17, 2024 12:49 AM

சிவகாசி : சிவகாசி அருகே திருத்தங்கல் முருகன் காலனியில் தெருவின் நடுவில் உள்ள மின் கம்பங்களால் வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்படுகிறது என குடியிருப்புவாசிகள் புலம்புகின்றனர்.
சிவகாசி அருகே திருத்தங்கல் முருகன் காலனி தெருவில் ரோடு சேதம் அடைந்த நிலையில் புதிதாக ரோடு போடப்பட்டது. ஆனால் ரோட்டின் நடுவே உள்ள மின்கம்பங்கள் அகற்றப்படாமலேயே ரோடு போடப்பட்டுள்ளது. இதனால் சைக்கிள், டூவீலர் சென்று வருவதே சிரமமாக உள்ளது.
இரவில் டூ வீலரில் வருபவர்கள் விபத்தில் சிக்குகின்றனர்.கார் உள்ளிட்ட பெரிய வாகனங்கள் வர முடியவில்லை. கட்டுமான பணிக்காக பெரிய வாகனங்களில் கொண்டு வரப்படும் பொருட்கள் தெருவின் முனையிலேயே இறக்கப்பட்டு கொண்டு செல்வதில் சிரமம் ஏற்படுகின்றது.
அவசரத்திற்கு ஆம்புலன்ஸ் வருவதிலும் சிரமம் ஏற்படுகின்றது. எனவே முருகன் காலனியில் ரோட்டில் நடுவில் உள்ள மின்கம்பங்களை மாற்றி அமைக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.