/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சேதமடைந்த பைபாஸ் ரோடு சீரமைப்பு
/
சேதமடைந்த பைபாஸ் ரோடு சீரமைப்பு
ADDED : ஜன 26, 2024 05:00 AM

சிவகாசி; தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக சிவகாசி பைபாஸ் ரோட்டில் சேதம் அடைந்த ரோடு தற்காலிகமாக சீரமைக்கப்பட்டது.
சிவகாசி பஸ் ஸ்டாண்டிலிருந்து இருந்து வெம்பக்கோட்டை ரோடு சந்திப்பு வரை, பி.கே.என்., ரோடு, வேலாயுத ரஸ்தா ரோடு, பைபாஸ் ரோடு உள்ளிட்ட இடங்களில் ரோட்டின் நடுவில் ரூ. 1.6 கோடி மதிப்பில் சென்டர் மீடியன் அமைத்து, 130 உயர் கோபுர மின் விளக்குகள் பொருத்தும் பணி நடந்துள்ளது.
உயர் கோபுர மின்விளக்கு அமைப்பதற்காக சென்டர் மீடியன் அமைக்கப்பட்டதால் ரோடுகள் மிகவும் குறுகிவிட்டது. தவிர இரு புறமும் ஆக்கிரமிப்புகளும் இருப்பதால் எந்த வாகனமும் எளிதில் சென்று வருவதில் சிரமம் ஏற்பட்டது.
இந்நிலையில் பைபாஸ் ரோட்டில் சென்டர் மீடியன் அருகே ரோடு சேதமடைந்து இருப்பதால் வாகன ஓட்டிகள் விபத்திற்குள்ளாகினர். போக்குவரத்திலும் பாதிப்பு ஏற்பட்டது. இது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது.
இதன் எதிரொலியாக சிவகாசி பைபாஸ் ரோட்டில் சேதம் அடைந்த ரோடு தற்காலிகமாக சீரமைக்கப்பட்டது. இதனால் வாகனங்கள் எளிதில் செல்ல முடிந்ததால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

