/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மாவட்டத்தில் குடியரசு தின விழா கோலாகலம்
/
மாவட்டத்தில் குடியரசு தின விழா கோலாகலம்
ADDED : ஜன 27, 2024 06:40 AM

விருதுநகர் ; விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்கில் 75வது குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதில் நேற்று காலை 8:15 மணிக்கு தேசிய கொடியேற்றி வைத்த கலெக்டர் ஜெயசீலன் போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டு மூவர்ண பலுான்களை பறக்கவிட்டார்.
தொடர்ந்து எஸ்.பி., பெரோஸ்கான் அப்துல்லா வரவேற்றார். சிறப்பாக பணியாற்றிய 139 போலீசாருக்கு முதல்வரின் காவல் பதக்கம், 18 மாவட்ட அலுவலர்கள், சமூக பொறுப்பு நிதியின் கீழ் அதிக நிதியுதவி வழங்கிய 8 நிறுவனங்கள், 2 கரிசல் எழுத்தாளர்கள், 4 மாற்றுதிறனாளி தொழில் முனைவோர்கள், 4 பட்டதாரி விவசாயிகள், சுகாதார நலனுக்காக சிறப்பாக சேவை புரிந்த ஒரு திருநங்கை என்பது உள்ளிட்ட பல துறைகளில் சிறப்பாக செயல்பட்டோருக்கும், அரசு அலுவலர்கள், ஊழியர்கள் 314 என மொத்தம் 436 பேருக்கு கலெக்டர் ஜெயசீலன் நற்சான்றுகள் வழங்கினார்.
மேலும் முன்னாள் படைவீரர் நலத்துறையின் சார்பாக போரில் உயிரிழந்த, ஊனமுற்ற படைவீரரின் குடும்பத்தினர் 2 நபர்களுக்கு தலா ரூ.25 ஆயிரம் மதிப்பில் வருடாந்திர பராமரிப்பு உதவித்தொகையாக ரூ.50 ஆயிரத்திற்கான காசோலைகள் வழங்கப்பட்டது. பள்ளி, கல்லுாரி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன.
டி.ஆர்.ஓ., ராஜேந்திரன், திட்ட இயக்குனர்கள் தண்டபாணி, பேச்சியம்மாள், ஆர்.டி.ஓ.,க்கள், தாசில்தார்கள், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர்.
* விருதுநகர் தினமலர் அலுவலகத்தில் கொடியேற்றப்பட்டது. ஊழியர்கள் மரியாதை செலுத்தினர்.
* செந்திக்குமார நாடார் கல்லுாரியில் முதல்வர் சாரதி வரவேற்றார். கல்லுாரி தலைவர் பழனிச்சாமி தலைமை வகித்து கொடி ஏற்றினார். என்.சி.சி., என்.எஸ்.எஸ்., ஜே.ஆர்.சி., செஞ்சுருள் சங்கம், உடற்கல்வித்துறை மாணவர்களின் அணிவகுப்பு நடந்தது. உப தலைவர்கள் ராஜமோகன், ரம்யா, செயலாளர் சர்ப்பராஜன், பொருளாளர் சக்திபாபு பேசினர்.
* கே.வி.எஸ்., மேல்நிலைப்பள்ளியில் பள்ளி செயலாளர் முரளிதரன் ஏற்றினார். பொருளாளர் ரத்தினவேல் இனிப்புகளை வழங்கினார். பள்ளி மாணவர்களின் உரை, கலைநிகழ்ச்சிகள் நடந்தன. ஏற்பாடுகளை தலைமை ஆசிரியர் சந்திரமோகன் செய்தனர்.
* காமராஜ் பொறியியல் தொழில்நுட்ப கல்லுாரியில் தலைவர் பெரியசாமி தேசிய கொடியை ஏற்றினார். செயலாளர் தர்மராஜன் கல்லுாரி கொடியை ஏற்றினார். முன்னாள் மாணவர்களான உயரதிகாரி ஸ்ரீராமன், தொழிலதிபர் சிவசுவாமிநாதன் கலந்து கொண்டனர்.
* வி.எஸ்.வி.என்., பாலிடெக்னிக் கல்லுாரியில் மானேஜிங் போர்டு தலைவர் கணேசன் கொடி ஏற்றினார். உப தலைவர் முருகேசன், செயலாளர் ராஜவேல், பொருளாளர் சரவணபாபு பங்கேற்றனர்.
* அரசு போக்குவரத்து பணிமனையில் பொதுமேலாளர் துரைசாமி கொடி ஏற்றினார். ஊழியர்களுக்கும், அவரது குழந்தைகளுக்கும் இனிப்பு வழங்கினார்.
* நகராட்சி அலுவலகத்தில் தலைவர் மாதவன் கொடி ஏற்றினார். கமிஷனர் லீனாசைமன், பொறியாளர் எட்வின் பிரைட் ஜோஸ் பங்கேற்றனர்.
* ஒன்றிய அலுவலகத்தில் தலைவர் சுமதி கொடி ஏற்றினார். அலுவலர்கள் பங்கேற்றனர்.
* பா.ஜ., கட்சி அலுவலகத்தில் ஆன்மிக பிரிவு செயலாளர் ஓம் சக்தி மாரிமுத்து கொடி ஏற்றினார். அரசு தொடர்பு மாவட்ட தலைவர் ராஜகோபால் உட்பட பலர் பங்கேற்றனர்.
* மக்கள் நீதி மய்யம் சார்பில் ஒன்றிய செயலாளர் நாகேந்திரன் தலைமையில் நகர செயலாளர் கமல் கண்ணன் கொடி ஏற்றினார். ஆதிதிராவிட அணி அமைப்பாளர் பன்னீர் இனிப்பு வழங்கினார்.
ஸ்ரீவில்லிபுத்தூர்
* ஸ்ரீவில்லிபுத்தூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி (பொறுப்பு) சம்பத்குமார் தேசிய கொடி ஏற்றி, இனிப்புகள் வழங்கினார். விழாவில் நீதிபதிகள், வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள், வழக்கறிஞர்கள், எழுத்தர்கள், நீதிமன்ற அலுவலர்கள், ஊழியர்கள் பங்கேற்றனர்.
* கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் துணைத் தலைவர் சசி ஆனந்த் தலைமையில் துணைவேந்தர் நாராயணன் கொடியேற்றி, என்.சி.சி மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். பதிவாளர் வாசுதேவன், அனைத்து கல்லூரி முதல்வர்கள், துறை தலைவர்கள், பேராசிரியர்கள், அலுவலர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.
* மொட்டமலை பாலகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் தாளாளர் டாக்டர் சுரேஷ் தலைமையில் முதல்வர் அருண் கொடியேற்றி, மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார். பேராசிரியர்கள், அலுவலர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.
* மல்லி சுந்தரேஸ்வரி கல்வியில் கல்லூரியில், கல்லூரி செயலர் திலீபன் ராஜா கொடியேற்றினார். நிர்வாக அலுவலர் பாலகிருஷ்ணன், முதல்வர் மல்லப்ப ராஜா, பேராசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.
* மகரிஷி வித்யா மந்திர் சி.பி.எஸ்.இ. பள்ளியில் தாளாளர் குருவலிங்கம், அறங்காவலர் சித்ரா மகேஸ்வரி தலைமையில் குடியரசு தின விழா நடந்தது. முதல்வர் கமலா, துணை முதல்வர்கள் ஜெயலட்சுமி, சரண்யா முன்னிலை வகித்தனர். ட்ரஸ்டி பூங்கொடி கொடியேற்றி மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கி பேசினார். மகரிஷி வித்யா மந்திர் மழலையர் துவக்கப்பள்ளியில் நிர்வாக அலுவலர் அழகர்சாமி கொடியேற்றினார். முதல்வர் சிவப்பிரியா பேசினார் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. ஆசிரியை சுகிர்தா நன்றி கூறினார்.
* லயன்ஸ் சர்வதேச பள்ளியிலும், மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியிலும் சங்கத் தலைவர் விஜய் மெர்ஜென்ட் கொடியேற்றி பேசினார். தாளாளர் வெங்கடாசலபதி, லயன்ஸ் சங்க உறுப்பினர்கள் குணசேகரன், முகமது முகைதீன், ஸ்ரீ ரங்க ராஜா, முனியாண்டி, சாத்தப்பன், ரஞ்சித், சிவகுருநாதன், கார்த்திக், அப்துல் நாசர், முதல்வர்கள் சிவக்குமார், சுந்தர மகாலிங்கம், துணை முதல்வர்கள் பாண்டிஸ்வரி, முகம்மது முகைதீன்,, ஆசிரியர்கள், அலுவலர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.
* வள்ளுவர் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தாளாளர் சிவக்குமரன் கொடியேற்றினார். நிர்வாக அலுவலர் சந்தானம், முதல்வர் டேவிட் மனோகரன், ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.
* மகாத்மா வித்யாலயா பள்ளியில் தாளாளர் முருகேசன் கொடியேற்றினார். முதல்வர் ராணி, ரோட்டரி சங்கத் தலைவர் முருகதாசன் எதிர்கால தலைவர் பால்சாமி, சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர். மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. ஆசிரியை சந்தன பிரியா நன்றி கூறினார்.
* ஒயிட் பீல்டு மழலையர் துவக்க பள்ளியில் தாளாளர் ராஜ்குமார் கொடியேற்றினார். முதல்வர் வனிதா, ஒருங்கிணைப்பாளர் சுமதி, ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர். ஆசிரியை பாண்டியம்மாள் தேவி நன்றி கூறினார்.
* சி.எஸ்.ஐ துவக்கப்பள்ளியில் தாளாளர் பால் தினகரன் தலைமையில் குடியரசு தின விழா நடந்தது. படிக்காசுவைத்தான்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயக்குமார் ஞானராஜ் கொடியேற்றி, மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கி பேசினார். பள்ளி நிர்வாக குழு உறுப்பினர்கள், தலைமை ஆசிரியை அனிதா, மாணவர்கள் பங்கேற்றனர்.
* சூளை விநாயகர் வித்யாலயா பள்ளியில் தாளாளர் இன்பராஜ் தலைமையில் குடியரசு தின விழா நடந்தது. துணை செயலாளர் சீனிவாசன் முன்னிலை வகித்தார். ஓய்வு பெற்ற புள்ளியியல் துறை உதவி இயக்குநர் சின்னச்சாமி கொடியேற்றினார். பள்ளி நிறுவனர் கிருஷ்ணன், பள்ளி கமிட்டி நிர்வாகிகள், முதல்வர்கள் ராஜேஸ்வரி, கற்பகவல்லி, ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.
* ராமச்சந்திரபுரம் கலைமகள் மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் சிவகாமிநாதன் கொடியேற்றினார். கல்வி கமிட்டி உறுப்பினர் ராமலிங்கம் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினார். ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.
* வத்திராயிருப்பு கிரீன் ஃபீல்டு நர்சரி துவக்கப்பள்ளியில் நடந்த குடியரசு தின விழாவில் தாளாளர் பெரிய மகாலிங்கம் தலைமை வகித்தார். முதல்வர் நல்லதாய் கொடியேற்றினார். ஆசிரியை பிரியதர்ஷினி, அலையன்ஸ் சங்க துணை ஆளுநர் சுப்புராஜ், மாவட்ட தலைவர் அறிவொளி முருகன் பேசினர். ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.
* வத்திராயிருப்பு ரங்காராவ் லயன்ஸ் பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் தாளாளர் விஜயகுமார் தலைமையில் குடியரசு தின விழா நடந்தது. பொருளாளர் டாக்டர் பால்ச்சாமி முன்னிலை வகித்தார். பள்ளி தலைவர் சுந்தரராஜ பெருமாள் கொடியேற்றினார். விழாவில் பள்ளி துணைத் தலைவர் ஆரியன் மதுரம், துணை செயலாளர் கூடலிங்கம், பொருளாளர் குமரேசன், அரிமா சங்க நிர்வாகிகள் முருகன், சுப்புராஜ் பேசினர். போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. முதல்வர் ராஜேஸ்வரி நன்றி கூறினார்.
* சுந்தரபாண்டியம் விவேகா நர்சரி துவக்கப்பள்ளியில் நிர்வாகி தியாகராஜன் தலைமை வகித்தார். முதல்வர் ஆனந்த லட்சுமி கொடியேற்றினார். ஆசிரியை கனகவல்லி, அலையன்ஸ் சங்க மாவட்ட தலைவர் ராமச்சந்திரன் பேசினர். ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர். ஆசிரியை முப்பெரும்தேவி நன்றி கூறினார்.
சிவகாசி
சிவகாசி எஸ்.எப்.ஆர்., மகளிர் கல்லுாரியில் முதல்வர் சுதா பெரிய தாய் தேசியக்கொடி ஏற்றினார். மாணவி ஷபானா வரவேற்றார். உதவி பேராசிரியர் கவிதா பேசினார். மாணவி மதுரா நன்றி கூறினார். ஏற்பாடுகளை மாணவர் பேரவை ஒருங்கிணைப்பாளர் கவிதா, உறுப்பினர்கள் செய்தனர்.
* சிவகாசி பி.எஸ்.ஆர்., பொறியியல் கல்லுாரியில் கல்லுாரி இயக்குனர்கள் அருண்குமார், விக்னேஸ்வரி தலைமை வகித்தனர். முதல்வர் செந்தில்குமார் தேசியக்கொடி ஏற்றினார். கல்லூரி தேசிய மாணவர் படையின் அணிவகுப்பு நடந்தது. . டீன் மாரிசாமி, ஐ.க்யூ.ஏ.சி., ஒருங்கிணைப்பாளர் பிச்சிப்பூ கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கல்லுாரி நிர்வாகம், உடற் கல்வித்துறை பேராசிரியர் சுந்தரமூர்த்தி, தேசிய மாணவர் படை ஒருங்கிணைப்பாளர் ரங்கராஜ் செய்தனர்.
* சிவகாசி காளீஸ்வரி கல்லுாரியில் முன்னாள் மாணவர் தமிழாசிரியர் ஜான்சன் ரத்தினராஜ் தேசியக் கொடி ஏற்றினார். கல்லுாரி செயலர் செல்வராசன் தலைமை வகித்தார். மாணவி ஸ்ரீமதி வரவேற்றார். முதல்வர் பாலமுருகன், துணை முதல்வர் முத்துலட்சுமி, நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் ராஜீவ் காந்தி உறுதிமொழி வாசித்தனர். மாணவர்கள் வெங்கடேஷ் யுவ மாலதி பேசினர். மாணவி ஷோபனா நன்றி கூறினார்.
* சிவகாசி காக்கிவாடன்பட்டி ஆர்.பொன்னுச்சாமி நாயுடு கல்வியியல் கல்லுாரி, கே.ஆர்.பி., கலை ,அறிவியல் கல்லுாரியில் கல்லுாரி தலைவர் பொன்ராஜ் தலைமை வகித்தார். கல்வியியல் கல்லுாரி முதல்வர் கண்ணன் முன்னிலை வகித்தார். கலை அறிவியல் கல்லுாரி முதல்வர் ராம் ஜெயந்தி தேசியக்கொடி ஏற்றினார். கண்ணன் தேசியக் கொடி ஏற்றினார். மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.
* சிவகாசி ஹயக்ரீவாஸ் சர்வதேச பள்ளியில் வெம்பக்கோட்டை இன்ஸ்பெக்டர் சங்கர் தேசிய கொடி ஏற்றினார். பள்ளி தாளாளர் ஜெயக்குமார், தலைமை முதல்வர் பாலசுந்தரம், முதல்வர் அம்பிகா தேவி பேசினர். துணை முதல்வர்கள் ஞானபுஷ்பம், சுதா கலந்து கொண்டனர்.
* சிவகாசி மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் சங்கீதா தேசிய கொடியேற்றினார். துணை மேயர், விக்னேஷ் பிரியா, கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தனர். சிறப்பாக பணிபுரிந்த அலுவலர்கள் துாய்மை பணியாளர்களுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டது. கவுன்சிலர்கள், மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
* சிவகாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடந்த ஒன்றிய தலைவர் முத்துலட்சுமி தேசியக்கொடி ஏற்றினார். துணைத் தலைவர் விவேகன் ராஜ் முன்னிலை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் புகழேந்தி, சீனிவாசன், ஒன்றிய கவுன்சிலர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
* சிவகாசி ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் விஸ்வநாதன் ஆர்.டி.ஓ., தேசியக் கொடி ஏற்றினார்.
* சிவகாசி கொங்கலாபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடந்த சுதந்திர தின விழாவில் பொறுப்பு தலைமை ஆசிரியர் கார்த்திகேயன் தேசிய கொடி ஏற்றினார். பட்டதாரி ஆசிரியர் ஜெயக்குமார் வரவேற்றார். சிவகாசி ஜே.சி.ஐ, டைனமிக் தலைவர் அபிராம் பேசினார். போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. மானகசேரி ஊராட்சி தலைவர் சுபிதா கலந்து கொண்டார். ஆசிரியை ஆனந்தவல்லி நன்றி கூறினார்.
* சிவகாசி லார்டு பி.சி.ஏ.ஏ., லயன்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தாளாளர் ரவீந்திரன் தேசியக்கொடி ஏற்றினார். பள்ளி முதல்வர் காளீஸ்வரன் வரவேற்றார். பள்ளி தலைவர் ரத்ன சேகர், பொருளாளர் கண்ணன் பேசினர். மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. ஆசிரியர் பிரதீபா தங்கம் நன்றி கூறினார்.
* சிவகாசி மைனாரிட்டி எஜுகேஷன் டிரஸ்ட் சார்பில் நடந்த குடியரசு தின விழாவில் இந்திய தேசிய லீக் மாநில செயலாளர் சையது ஜஹாங்கீர் தேசிய கொடி ஏற்றினார். அறக்கட்டளை நிறுவனர் செய்யது ஜாகிர் உசேன் தலைமை வகித்தார். செயலாளர் ரஹ்மத்துல்லா பொருளாளர் பாபு பாட்ஷா முன்னிலை வகித்தனர். ஒருங்கிணைப்பாளர் முகமது இப்ராஹிம் வரவேற்றார். இந்திய தேசிய லீக் நகர தலைவர் முகமது கான், நகர செயலாளர் முத்து விலாஸ், இக்பால் கலந்து கொண்டனர்.
* சிவகாசி அரிமா பதின்ம மேல்நிலைப் பள்ளியில் தாளாளர் ரமேஷ் குமார் தேசியக்கொடி ஏற்றினார். அரிமா சங்கத் தலைவர் பிரபாகர் வரவேற்றார். முதல்வர் பாண்டியன், ஆரம்பப் பள்ளி பொறுப்பாசிரியர் மெர்சி கலந்து கொண்டனர் . மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடந்தது. போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
* சிவகாசி அரசு கலை அறிவியல் கல்லுாரியில் கல்லுாரி முதல்வர் தாமோதரன் தேசியக்கொடி ஏற்றினார். கல்லுாரி விலங்கியல் துறை தலைவர் ராமதாஸ், தமிழ் துறை தலைவர் கிளிராஜ், சென்னை ஆர்.கே., நகர் அரசு கலைக் கல்லுாரி வணிகவியல் துறை தலைவர் சுரேஷ் பேசினர். மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடந்தது. ஏற்பாடுகளை உடற்கல்வி இயக்குனர் சாந்தி நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் கணேச முருகன் செய்தனர்.
* சிவகாசி ஒன்றியம் தேவர்குளம் ஊராட்சியில் ஊராட்சி தலைவர் முத்துவள்ளி, சித்துராஜபுரம் ஊராட்சியில் தலைவர் லீலாவதி, அனுப்பங்குளம் ஊராட்சியில் தலைவர் கவிதா, விஸ்வநத்தம் ஊராட்சியில் தலைவர் நாகராஜ், செங்கமல நாச்சியார்புரம் ஊராட்சியில் தலைவர் மாரியப்பன், நாரணாபுரம் ஊராட்சியில் தலைவர் தேவராஜன், ஆனையூர் ஊராட்சியில் தலைவர் லட்சுமி நாராயணன், பள்ளப்பட்டி ஊராட்சியில் தலைவர் ராஜபாண்டி தேசியக்கொடி ஏற்றினர்.
அருப்புக்கோட்டை
* அருப்புக்கோட்டை வெங்கடேஸ்வரா மெட்ரிக் பள்ளியில் தாளாளர் சுப்புராம் கொடியேற்றினார். முதல்வர் சசிகலா வரவேற்ற நிர்வாக அதிகாரி ஆர்த்தி சிறப்புரையாற்றினார் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.
* எஸ்.டி.ஆர்.என்., அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை நவமணி கொடியேற்றினார். மாணவ மாணவிகள் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
* கே.எஸ்.எஸ்., மெட்ரிக் பள்ளியில் நாடார்கள் உறவின்முறை செயலாளர் பவுன்ராஜ் கொடியேற்றினார். தலைமை ஆசிரியர் மனோன்மணியம் வரவேற்றார். கலை நிகழ்ச்சிகள் நடந்தது.
* எஸ்.பி.கே., துவக்கப் பள்ளியில் தொழிலதிபர் ஸ்ரீதர் தலைமையில் தலைமை ஆசிரியை அருணாதேவி கொடியேற்றினார்.
* எஸ்பிகே., நர்சரி பள்ளியில் ஓய்வு பெற்ற போஸ்ட் மாஸ்டர் ராமச்சந்திரன் கொடியேற்றினார். தலைமை ஆசிரியை உமாராணி வரவேற்றார். செயலாளர் ராஜாசெல்வம் சிறப்புரையாற்றினார்.
* எஸ்.பி.கே., பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நாடார்கள் உறவின்முறை கௌரவ ஆலோசகர் மனோகரன் கொடியேற்றினார். பள்ளி செயலர் காசி கோபிநாத் முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியை தங்கரதி வரவேற்றார். மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.
* எஸ்.பி.கே., கல்லூரியில் செயலாளர் முத்துதினகரன் தலைமையில் முதல்வர் செல்லதாய் கொடியேற்றினார். தலைவர் சங்கர், நிர்வாகிகள் கலந்து கொண்டனர். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
* அல்-அமீன் முஸ்லிம் மேல்நிலைப் பள்ளியில் டவுன் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் கொடியேற்றினார். தலைமை ஆசிரியர் இப்ராஹிம் வரவேற்றார். செயலாளர் காஜாமைதீன் முன்னிலை வகித்தார்.
* சி.எஸ்.ஐ., பெண்கள் மேல்நிலை பள்ளியில் தலைமை ஆசிரியர் பாஸ்கரன் கொடியேற்றினார். சிறப்பு விருந்தினர் ரஞ்சன் கனகமணி சிறப்புரையாற்றினார். செயலாளர் நெல்சன் துரைராஜ் நன்றி கூறினார்.
* திருநகரம் செங்குந்தர் உயர்நிலைப் பள்ளியில் செயலர் செந்தில்வேல் முருகன் கொடியேற்றினார். தலைமை ஆசிரியர் அய்யனார் வரவேற்றார். உறவின்முறை செயலாளர் ஆதிலிங்கம் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
* கிரீன் விஸ்டம் மெட்ரிக் பள்ளியில் தீயணைப்பு நிலைய அலுவலர் சேக் உதுமான் கொடியேற்றினார். எஜுகேஷனல் சொசைட்டி தலைவர் காஜா மைதீன், செயலாளர் சம்சுதீன், நிர்வாகிகள் லிபியா, சாகுல்அமீது கலந்து கொண்டனர்.
* அருப்புக்கோட்டை சாலியர் மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் பொன்னம்பலம் கொடியேற்றினார். ஆசிரியர்கள் ,மாணவர்கள் கலந்து கொண்டனர்.
* அருப்புக்கோட்டை நகராட்சியில் தலைவர் சுந்தரலட்சுமி கொடியேற்றினார். கமிஷனர் அசோக்குமார், துணைத் தலைவர் பழனிச்சாமி, கவுன்சிலர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
* அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய குழு தலைவர் சசிகலா கொடியேற்றினார். பி.டி.ஓ.க்கள் சூரியகுமாரி, காஜா மைதீன் பந்தே நவாஸ், துணை தலைவர் உதயசூரியன், கவுன்சிலர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
* அருப்புக்கோட்டை ஒருங்கிணைந்த கோர்ட் வளாகத்தில் குற்றவியல் நீதிபதி முத்துஇசக்கி கொடியேற்றினார். வக்கீல்கள் சங்க தலைவர் ஜோபு ராம்குமார், வக்கீல்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
* அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் தலைமை மருத்துவர் இளங்கோ கொடியேற்றினார். டாக்டர்கள் அருணாச்சலம், காமாட்சி பாண்டியன், பாலமுருகன், காந்தி, பார்மசிஸ்ட் மணிசங்கர், செவிலியர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
* அருப்புக்கோட்டை டிஎஸ்பி., அலுவலகத்தில் ராஜாமணி டி.எஸ்.பி., கொடியேற்றினார். டவுண் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டர் பாலமுருகன், தாலுகா ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டர் கிரேஸி சோபியா, மகளிர் ஸ்டேஷனில் எஸ்.ஐ. , ராபியம்பாள், பந்தல்குடி ஸ்டேஷனில் எஸ்.ஐ., அஜீஸ் கொடியேற்றினர்.
* ரமணாஸ் மகளீர் கலை அறிவியல் கல்லூரியில் கல்லூரி சேர்மன் ராமச்சந்திரன் கொடியேற்றினார். செயலாளர். இளங்கோவன் முன்னிலை வகித்தார். ரமணாஸ் கல்வியியல் கல்லூரியில் செயலர் சங்கர நாராயணன் கொடியேற்றினார். மாணவிகள் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. முதல்வர் தில்லை நடராஜன், பி.எட்., கல்லூரி முதல்வர் ராஜேந்திரன் சிறப்புரையாற்றினர். பேராசிரியை ஜெயலட்சுமி நன்றி கூறினார்.
சாத்துார்
* கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியில் ஓய்வு பெற்ற கர்னல் சுந்தரம் தேசிய கொடியை ஏற்றினார். தாளாளர் அருணாச்சலம் இயக்குனர் சண்முகவேல் முதல்வர்கள் காளிதாசமுருகவேல், லட்சுமி அம்மாள் பாலி டெக்னிக் ராஜேஷ்வரன், கே.ஆர்.கலை அறிவியல் கல்லுாரி மதிவண்ணன் மாணவமாணவிகள் அலுவலர்கள் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.
* சாத்துார் மேட்டமலை கிருஷ்ணசாமி, கல்வி குழுமத்தின் கிருஷ்ணசாமி கலை கல்லுாரி பி.எஸ்.என்.எல். பி.எட்., கல்லுாரியில் தலைவர் ராஜு பாப்பா தலைமை வகித்து கொடியேற்றினார். முதல்வர்கள் உஷா தேவி, ராஜேஸ்வரி முன்னிலை வகித்தனர். மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடந்தது. பேராசிரியர்கள் அலுவலர்கள் விழாவில் கலந்து கொண்டனர்.
* சாத்துார் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக் குழுத் தலைவர் நிர்மலா கொடி ஏற்றினார். மாணவர்கள் கவுன்சிலர்கள் பி.டி.ஓ.க்கள் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
* சாத்துார் நகராட்சி அலுவலகத்தில் நகராட்சித் தலைவர் குருசாமி கொடி ஏற்றினார். கமிஷ்னர் ஜெகதீஸ்வரி மாணவர்கள் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.
* சாத்துார் தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் லோகநாதன் கொடியேற்றினார். அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
* சாத்துார் டி.எஸ்.பி.அலுவலகத்தில் வினோஜி கொடியேற்றினார். அலுவலர்கள், போலீசார் கலந்து கொண்டனர்.
ராஜபாளையம்
* ராஜபாளையம் நகராட்சியில் தேசிய கொடியை நகராட்சி தலைவர் பவித்ரா ஏற்றி வைத்தார். நகராட்சி அலுவலர்கள், கவுன்சிலர்கள் பங்கேற்றனர். இனிப்பு வழங்கப்பட்டது.
* ராஜபாளையம் ராம்கோ இன்ஜினியரிங் கல்லுாரியில் முதல்வர் கணேசன் கொடியேற்றினார். துணை முதல்வர் ராஜ கருணாகரன் நிர்வாக பொது மேலாளர் செல்வராஜ் பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். போட்டிகளில் வெற்றி பெற்ற ஆசிரியர்கள் மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
* ராஜூக்கள் கல்லுாரியில் அரிமா சங்க தலைவர் ராமராஜூ கொடியேற்றினார். முதல்வர் வெங்கடேசன் தலைமை வகித்தார். மாணவர்கள் அணிவகுப்பு நடந்தது. மினி மாரத்தான் போட்டி நடைபொற்று வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை உடற்கல்வி இயக்குனர் முத்துக்குமார் செய்திருந்தார்.
* ந.அ. அன்னப்ப ராஜா நினைவு மேல்நிலைப் பள்ளியில் பள்ளி செயலர் கிருஷ்ணமூர்த்தி ராஜா தலைமை வகித்தார். தலைமையாசிரியர் ரமேஷ் வரவேற்றார். தோல் நோய் மருத்துவர் ராஜேந்திரன் கொடியேற்றினார். மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
* கேசா டி மிர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் வைமா கல்வி குழும தலைவர் திருப்பதி செல்வன் தேசிய கொடி ஏற்றினார். முதுநிலை முதல்வர் அருணா தேவி முன்னிலை வகித்தார். மாணவர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
* ராஜபாளையம் ஸ்ரீ ராமலிங்க விலாஸ் ஜெயராம் துவக்கப்பள்ளியில் செயலர் பால சுப்பிரமணியன் கொடியேற்றினார். தலைமை ஆசிரியர் மகேஸ்வரி வரவேற்றார். ஆசிரியை வாசுகி நன்றி கூறினார்.
* சத்திரப்பட்டி ஆறுமுகம் பழனிக்குரு மாடர்ன் சிபிஎஸ்இ பள்ளி மற்றும் பெண்கள் கலை அறிவியல் கல்லுாரியில் நிறுவனர் ஆறுமுகம் கொடியேற்றினார். தாளாளர் பழனிக்குரு முன்னிலை வகித்தார். முதல்வர் சத்தியமூர்த்தி ஆலோசகர் சித்ராதேவி ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
* ராஜபாளையம் நகர் காங்., சார்பில் நகர் அலுவலகத்தில் நகர் தலைவர் சங்கர் கணேஷ் கொடியேற்றி இனிப்புகள் வழங்கினார். காங்., கவுன்சிலர்கள், கட்சியினர் கலந்து கொண்டனர்.
* செட்டியார்பட்டி இ. கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் மாவட்ட செயலாளர் லிங்கம் கொடியேற்றினார். ஒன்றிய செயலாளர் கணேச மூர்த்தி, ஒன்றிய கவுன்சிலர் பகத்சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
* மாப்பிள்ளை விநாயகர் நற்பணி மன்றம் சார்பில் பொன்விழா மைதானம் அருகே சுதந்திர தின வளைவில் நடந்த நிகழ்ச்சிக்கு மன்ற தலைவர் ராமராஜ் தலைமை வகித்தார். தீயணைப்பு துறை நிலைய அதிகாரி சீனிவாசன் கொடியேற்றினார். ஓய்வு ராணுவ வீரர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
* தர்மாபுரம் காந்திஜி வாசகர் சாலை நுாலகம் சார்பில் நடந்த நிகழ்ச்சியில் வாசக சாலை புரவலர் தர்மலிங்க ராஜா கொடி ஏற்றி உறுப்பினர்களுக்கு இனிப்பு வழங்கினார்.
காரியாபட்டி -
* காரியாபட்டி ஒன்றிய அலுவலகத்தில் தலைவர் முத்துமாரி கொடி ஏற்றினார். பேரூராட்சியில் தலைவர் செந்தில் கொடியேற்றினார். போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் கொடியேற்றினார். செயின்ட் மேரிஸ் மெட்ரிகுலேஷன் பள்ளியில் தாளாளர் கீதா கொடியேற்றினார். தாலுகா அலுவலகத்தில் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் அய்யக்குட்டி கொடி ஏற்றினார். அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியை சண்முகத்தாய் கொடி ஏற்றினார்.
* நரிக்குடியில் ஒன்றிய தலைவர் காளீஸ்வரி கொடியேற்றினார். உலக்குடி அரசு மேல்நிலைப்பள்ளியில் ஊராட்சி தலைவர் ராஜம்மாள் கொடி ஏற்றினார்.

