/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ரோடு சேதம், பயன்பாடில்லாத குடிநீர் தொட்டி, துார்வாராத வாறுகால்
/
ரோடு சேதம், பயன்பாடில்லாத குடிநீர் தொட்டி, துார்வாராத வாறுகால்
ரோடு சேதம், பயன்பாடில்லாத குடிநீர் தொட்டி, துார்வாராத வாறுகால்
ரோடு சேதம், பயன்பாடில்லாத குடிநீர் தொட்டி, துார்வாராத வாறுகால்
ADDED : அக் 15, 2025 01:02 AM

சிவகாசி; தெருக்களில் ரோடு சேதம், வாறுகால் துார்வாராததால் தொற்றுநோயால் பாதிப்பு, செயல்பாட்டிற்கு வராத குடிநீர் தொட்டி உட்பட பல்வேறு பிரச்னைகளால் திருத்தங்கல் கே.கே., நகர், முனீஸ்வரன் காலனி குடியிருப்புவாசிகள் வேதனையடைந்துள்ளனர்.
இது குறித்து இப்பகுதி குடியிருப்போர் நலச்சங்க நிர்வாகிகள் தமயந்தி, மாரிச்சாமி, அந்தோணியம்மாள், பேச்சியம்மாள், சந்தனம் மாரி கூறியதாவது, இப்பகுதியில் உள்ள மல்லிகை நகர், சேவுக்கடை தெரு, 32 வீட்டு பின்புறம் உள்ளிட்ட தெருக்களில் ரோடு அமைக்கப்பட்டு 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. தற்போது ரோடு முற்றிலும் சேதம் அடைந்துள்ளது.
இதனால் நடந்து செல்வதே பெரிதும் சிரமமாக உள்ளது. மழைக்காலங்களில் தண்ணீர் வெளியேற வழி இன்றி வீடுகளுக்குள் புகுந்து விடுகின்றது. இதில் புழுக்கள், பாம்பு உள்ளிட்ட விஷப்பூச்சிகளும் வருகின்றது. வாறுகால் துார்வாராததால் கழிவுநீர் வீட்டின் முன்பு தேங்கி விடுகிறது.
மேலும் தனியார் ஆக்கிரமிப்பால் மழைநீர் செல்லவும் வழியில்லை. இப்பகுதியில் புழக்கத்திற்கு என கட்டப்பட்ட மேல்நிலைத் தொட்டியில் இருந்து இதுவரையிலும் தண்ணீர் வினியோகம் இல்லை.
மேலும் 10 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே வருகின்ற குடிநீர் அனைவருக்கும் போதவில்லை. இதனால் குளிக்க, குடிக்க என அனைத்து தேவைக்கும் குடிநீரை விலைக்கு வாங்க வேண்டியுள்ளது.
புழக்கத்திற்கு தண்ணீர் ஏற்பாடு செய்ய வேண்டும். ஐந்து நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்பகுதியில் தெருநாய்கள் குழந்தைகளை கடித்து துன்புறுத்துகிறது. சுகாதார வளாகம் இல்லாததால் திறந்தவெளியினை கழிப்பறையாக பயன்படுத்த வேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளது.
எனவே உடனடியாக சுகாதார வளாகம் கட்ட வேண்டும், என்றனர்.

