/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பி.எஸ்.ஆர்.,பொறியியல் கல்லுாரியில் கருத்தரங்கம்
/
பி.எஸ்.ஆர்.,பொறியியல் கல்லுாரியில் கருத்தரங்கம்
ADDED : ஜூன் 20, 2025 12:15 AM

சிவகாசி: சிவகாசி பி.எஸ்.ஆர்.,பொறியியல் கல்லுாரியில் முன்னாள் மாணவர் அமைப்பு, அமெரிக்கா ஜென் ஏ ஐ ஹெல்த் கேர் சார்பில் தொழில்நுட்பமும் தொழில் முனைப்பும் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது.
கல்லுாரி தாளாளர் சோலைசாமி தலைமை வகித்தார். கல்லுாரி இயக்குனர்கள் அருண்குமார், விக்னேஷ்வரி முன்னிலை வகித்தனர். முதல்வர் செந்தில்குமார் வரவேற்றார். டீன் மாரிசாமி வாழ்த்தினார். ஜென் ஏ ஐ ஹெல்த் கேர் நிர்வாக இயக்குனர், கல்லுாரி முன்னாள் மாணவர் ரமேஷ் பங்கேற்று பேசியதாவது, மருத்துவத் துறையில் செயற்கை நுண்ணறிவின் சக்தியை பயன்படுத்தி நோயாளிகளுக்கு சிக்கனமான, துல்லியமான சேவைகளை வழங்கும் நோக்கில் தொழில் முனைவு பயணம் தொடங்கப்பட்டுள்ளது.
தெளிவான கண்ணோட்டம், வல்லமை, அறிவு மற்றும் ஒத்துழைப்பு திறன்களை கொண்டு செயல்பட்டால் எதிர்பார்த்த இலக்கை எட்ட முடியும். என்றார். தொடர்ந்து மாணவர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். துறைத் தலைவர் விஜய் வேல் பிரபாகர், ஜென் ஏஐ நிறுவன மேலாளர்கள் சுதா, ஜஸ்வந்தி கலந்து கொண்டனர்.