
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாத்துார், : சாத்துார் ஜிவிஜெ இன்டர்நேஷனல் பள்ளியில் விளையாட்டு விழா நடந்தது. செயலாளர் வத்சலா தேவி தலைமை வகித்தார். தாளாளர் ரமேஷ்கண்ணன் முன்னிலை வகித்தார். முதல்வர் சரவணன் வரவேற்றார்.
பள்ளி மாணவர்களுக்கிடையே நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், ஈட்டி எறிதல், 100 மீட்டர் மற்றும் 200 மீட்டர் அளவிலானஓட்டப்பந்தயம், யோகாசனப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.
உடற்கல்வி ஆசிரியை கீதாஅமுதராஜன் நடுவராக இருந்து போட்டிகளை நடத்தினார். பள்ளி நிர்வாகத்தின் சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. விளையாட்டு விழாவில் மாணவர்கள் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.