/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஸ்ரீவி., செண்பகத்தோப்பில் கட்டணம் வசூலிப்பது நிறுத்தும்
/
ஸ்ரீவி., செண்பகத்தோப்பில் கட்டணம் வசூலிப்பது நிறுத்தும்
ஸ்ரீவி., செண்பகத்தோப்பில் கட்டணம் வசூலிப்பது நிறுத்தும்
ஸ்ரீவி., செண்பகத்தோப்பில் கட்டணம் வசூலிப்பது நிறுத்தும்
ADDED : ஜன 10, 2024 12:01 AM
ஸ்ரீவில்லிபுத்தூர் : ஸ்ரீவில்லிபுத்தூர் செண்பகத் தோப்பு பேச்சியம்மன் ,காட்டழகர்கோயிலுக்கு வரும் பக்தர்களிடம் வனத்துறையும், அறநிலை துறையும் கட்டணம் வசூலிப்பதை, கலெக்டரின் தெளிவான இறுதி உத்தரவு வரும் வரை இருதரப்பினரும் நிறுத்தி வைக்க வேண்டுமென சமாதான கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
ஸ்ரீவில்லிபுத்தூர் செண்பகத் தோப்பில் ஆண்டாள் கோவிலுக்கு சொந்தமான பேச்சியம்மன், காட்டழகர் கோவிலுக்கு செல்வதற்கு கோயில் நிர்வாகத்தின் சார்பில் பார்க்கிங் கட்டணம் வசூலிக்க ஏலம் விடப்பட்டு பணம் வசூலிக்கப்பட்டு வந்தது.
கடந்த சில மாதங்களாக வனத்துறையும் இது எங்களுக்கு சொந்தமான பகுதி என கூறி நுழைவு கட்டணம் வசூலித்தது. ஒரே இடத்துக்கு இரு அரசு துறையும் போட்டி போட்டு பணம் வசூலித்தது, பொது மக்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வனத்துறையும் நுழைவு கட்டணம் மட்டுமின்றி பார்க்கிங் கட்டணத்தையும் சேர்த்து வசூலித்தது. இதனால் ஒரே இடத்திற்கு மூன்று கட்டணம் கொடுக்க வேண்டிய நிலை பக்தர்களுக்கு ஏற்பட்டது.
இந்நிலையில் நேற்று மாலை ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் செந்தில்குமார் தலைமையில் சமாதான கூட்டம் நடந்தது. இதில் கோயில் செயல் அலுவலர் முத்துராஜ், வனசரகர் கார்த்திக், மம்சாபுரம் போலீசார், வருவாய் துறையினர் பங்கேற்றனர்.
கூட்டத்தில், இப்பிரச்சினையில் கலெக்டரின் தெளிவான இறுதி உத்தரவு பெறும் வரை செண்பகத் தோப்பில் இரண்டு அரசுத்துறைகளும் கட்டணம் வசூல் செய்வதை நிறுத்த வேண்டுமென முடிவு செய்யப்பட்டது.

