/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சகதியால் அவதி; ஆக்கிரமிப்பால் சிரமம்
/
சகதியால் அவதி; ஆக்கிரமிப்பால் சிரமம்
ADDED : ஜன 17, 2024 12:45 AM
ஸ்ரீவில்லிபுத்தூர் : ரோட்டோர சகதியால் அவதி, மீன்கடைகள் ஆக்கிரமிப்பால் சிரமம், சுகாதாரக் கேடு, கொசுத்தொல்லை, பெண்கள் சுகாதார வளாகம் இல்லாமல் சிரமம் என பல்வேறு குறைபாடுகளுடன் வசித்து வருகின்றனர் ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி 18 வது வார்டு மக்கள்.
சந்தைப்பேட்டை தெரு, கூனங்குளம் தெற்கு கடைசி தெரு, உழவர் சந்தை தெரு , சிவஞானபுரம் தெருக்களை கொண்டது இந்த வார்டு.
இதில் சந்தைப்பேட்டை தெருவிற்கு என தனியாக பெண்கள் சுகாதார வளாகம் இல்லாததால், அப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். மழை , இரவு நேரங்களில் பாதிக்கப்படுகின்றனர். சர்ச் சந்திப்பில் இருந்து உழவர் சந்தை வரை உள்ள தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும் சகதி ஏற்பட்டு மக்கள் நடந்து செல்ல மிகவும் சிரமப்படும் நிலை உள்ளது.
கல்லறை வாசலில் இருந்த கழிவுநீர் வாறுகால் கழிவுகளால் அடைபட்டு உள்ளது.
உழவர் சந்தையில் இருந்து அரசு மருத்துவமனைக்கு செல்லும் ரோட்டில் மீன் கடைகள் ஆக்கிரமிப்பால் அவசர நேரத்தில் ஆம்புலன்ஸ்கள் செல்ல முடியவில்லை.
வார்டில் அனைத்து தெருக்களிலும் தினசரி தூய்மை பணி செய்யப்படாததால் கழிவுகள் தேங்கி சுகாதாரக் கேடு, கொசுத்தொல்லை துர்நாற்றம் போன்ற சிரமங்களுக்கு மக்கள் ஆளாகி வருகின்றனர்.
இத்தகைய குறைகளை நகராட்சி நிர்வாகம் உடனடியாக சரி செய்ய வேண்டும் என்பது வார்டு மக்களின் எதிர்பார்ப்பாகும்.

