ADDED : ஜன 26, 2024 05:05 AM

சிவகாசி; சாத்துார் சடையம்பட்டியில் உள்ள சன் இந்தியா பப்ளிக் , மெட்ரிக் பள்ளிகளில் முதலாவது ஆண்டு விழா நடந்தது.
தொழிலதிபர் ரவீந்திரன், பள்ளி தலைவர் பிரம்மன், நிர்வாக இயக்குனர் பரமேஸ்வரி குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தனர். பள்ளி தாளாளர் சூரஜ் குமார் வரவேற்றார். பள்ளி முதல்வர் ஆரோக்கிய ராஜா ஆண்டறிக்கை வாசித்தார்.
சிறப்பு விருந்தினராக பங்கேற்ற பேச்சாளர் கோபிநாத் மாணவர்கள், பெற்றோர்களிடம் கலந்துரையாடிய பின்னர் பேசியதாவது, அந்த காலத்தில் பெற்றோர் கூறியதை குழந்தைகள் கேட்டார்கள். ஆனால் தற்போது கேட்பதில்லை. குழந்தைகளிடம் பெற்றோர் நண்பர்களாக பழக வேண்டும்.
அப்பாவை காட்டி பயமுறுத்தக் கூடாது. குழந்தைகளை கேள்வி கேட்கச் செய்து பழக்க வேண்டும். இன்றைய காலகட்டத்தில் பெற்றோர் ஆசிரியர்களாகவும், ஆசிரியர்கள் பெற்றோர்களாகவும் உள்ளனர்.
மாணவர்கள் நம்மால் முடியும் என்று எண்ண வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். பள்ளி கல்வி சார் இயக்குனர் சிவகாமி, பள்ளி துணை முதல்வர் சங்கர், பிரியதர்ஷினி, ஜெயலட்சுமி, ஆசிரியர்கள், பெற்றோர்கலந்து கொண்டனர். ஆசிரியர் சங்கீதா நன்றி கூறினார்.

