நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர், ; விருதுநகர் வாலசுப்பிரமணியசுவாமி கோயிலில் தைப்பூச தேரோட்டம் நடந்தது. ஜன. 18ல் துவங்கிய தைப்பூச திருவிழாவில் தினந்தோறும் சுவாமி மான், வெள்ளி சப்பரம், மயில், காமதேனு, பூத வாகனங்களில் வலம் வந்தார். ஜன. 24ல் சூரசம்ஹாரம் நடந்து.
நேற்று முன்தினம் தைப்பூசத்தை முன்னிட்டு திருக்கல்யாணம் நடந்தது. நேற்று கும்ப பூஜை, யாக பூஜைகள் நடத்தப்பட்டன.
மாலை 5:05 மணிக்கு வாலசுப்பிரமணிய சுவாமி வள்ளி, தெய்வானை உடன் சட்ட தேரில் அமர்ந்து ரத வீதிகளில் பவனி வந்தனர். ஏற்பாடுகளை விருதுநகர் ஹிந்து நாடார் தேவஸ்தானத்தினர் செய்தனர்.

