/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
அரசு போக்குவரத்து கழக கிளை மேலாளரை தாக்கிய ஓட்டுநர்
/
அரசு போக்குவரத்து கழக கிளை மேலாளரை தாக்கிய ஓட்டுநர்
அரசு போக்குவரத்து கழக கிளை மேலாளரை தாக்கிய ஓட்டுநர்
அரசு போக்குவரத்து கழக கிளை மேலாளரை தாக்கிய ஓட்டுநர்
ADDED : ஜன 28, 2024 01:59 AM
விருதுநகர்: விருதுநகர் அரசு போக்குவரத்து பணிமனை கிளை மேலாளர் பாலமுருகன் 47, என்பவரை விடுப்பு கேட்டு ஓட்டுநர் பாலசுப்பிரமணி தாக்கியதால் போலீசார் விசாரிக்கின்றனர்.
விருதுநகர் அரசு போக்குவரத்து பணிமனையில் கிளை மேலாளராக பணியாற்றுபவர் பாலமுருகன். இவர் ஜன. 26 காலை 11:20 மணிக்கு பணிமனை அலுவலகத்தில் இருந்தார். அங்கு வந்த மீசலுார் அண்ணாநகரைச் சேர்ந்த ஓட்டுநர் பாலசுப்பிரமணியன் விடுமுறை கடிதத்தில் கையெழுத்திடுமாறு கூறியுள்ளார். அதற்கு பாலமுருகன் தொடர்ந்து 7 நாட்களாக எவ்வித அனுமதியும் இல்லாமல் விடுப்பு எடுத்ததால் கையெழுத்து போட முடியாது, உதவி பொறியாளரிடம் கேட்டுக்கொள்கிறேன் என பதில் அளித்துள்ளார். ஆனால் விடுப்பு வழங்க வேண்டும் என கிளை மேலாளரை ஓட்டுநர் பாலசுப்பிரமணியன் தாக்கினார். விருதுநகர் போலீசார் விசாரிக்கின்றனர்.