/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மனுக்களுக்கு பதில் மட்டுமே இருக்கிறது; தீர்வு இல்லை
/
மனுக்களுக்கு பதில் மட்டுமே இருக்கிறது; தீர்வு இல்லை
மனுக்களுக்கு பதில் மட்டுமே இருக்கிறது; தீர்வு இல்லை
மனுக்களுக்கு பதில் மட்டுமே இருக்கிறது; தீர்வு இல்லை
ADDED : ஜன 10, 2024 12:14 AM

சிவகாசி : விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் கொடுக்கப்படும் மனுக்களுக்கு பதில் தான் இருக்கிறது தீர்வு கிடைப்பதில்லை ,என சிவகாசியில் விவசாயிகள் தெரிவித்தனர்.
சிவகாசி ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் நடந்த விவசாயிகள் குறைதீர் கூட்டத்திற்கு ஆர்.டி.ஓ.,விஸ்வநாதன் தலைமை வகித்தார்.
அம்மையப்பன், ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா அலுவலகம் அருகே உள்ள கண்மாய் உடைந்தது. இதனை சரி செய்வதற்காக பிள்ளையார் குளம் மேய்ச்சல் புறம்போக்கு நிலத்தில் மண் அள்ளுவதற்கு தனியாருக்கு அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் அங்கு அதிகமான மண் எடுக்கப்பட்டு விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகிறது.
ஆர்.டி.ஓ.,: இது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்.
ஞான குரு, மம்சாபுரம்: வாகைக்குளம் ஊருணியில் தனியார் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இடையன்குளம் செல்லும் ரோடு சேதமடைந்து அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.
இதனைத் தொடர்ந்து அனைத்து விவசாயிகளும், மாவட்டம் முழுவதுமே பரவலாக மழை பெய்து உள்ளதால் மக்காச்சோளம் நெற் பயிர்கள் சேதம் அடைந்து நஷ்டம் ஏற்பட்டுள்ளது. பயிர்களுக்கு இன்சூரன்ஸ் செய்த நிலையில், உடனடியாக உரிய இழப்பீட்டுத் தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். குறைதீர் கூட்டத்தில் கொடுக்கப்படும் மனுக்களுக்கு பதில் தான் கிடைக்கின்றது தீர்வுகள் கிடைக்கவில்லை என்றனர்.
ஆர்.டி.ஓ.,பதிலளித்து பேசுகையில், கொடுக்கப்படும் மனுக்கள் மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். பயிர்களுக்கு இழப்பீட்டுத் தொகை கிடைப்பதற்கு பரிந்துரை செய்யப்படும், என்றார். இவ்வாறு விவாதம் நடந்தது.
தாசில்தார்கள் வடிவேல், ராமச்சந்திரன், முத்துமாரி, செந்தில், உட்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

