நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராஜபாளையம்: ராஜபாளையம் சங்கரன் கோவில் ரோடு ஐ.என்.டி.யூ.சி நகர் சிங்கத்திருளப்ப சுவாமி கோயில் வருஷாபிஷேகம், முப்பழ பூஜை விழா நடந்தது.
கான்சாபுரம் நம்பூர் சிங்கராஜா வகையறா சார்பில் நடத்தப்பட்ட பூஜையில் ஸ்ரீவில்லிபுத்துார் பட கோப ராமானுஜ ஜீயர் பங்கேற்று பக்தர்களுக்கு ஆசி வழங்கினார். முன்னதாக ஜீயர் சுவாமிகளுக்கு பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.
கோவில் வளாகத்தில் அமைந்துள்ள விநாயகர், சேலைக்காரி அம்மன், பேச்சியம்மன், ராக்காச்சி அம்மன், குதிரை வீரன் உள்ளிட்ட உற்ஸவ மூர்த்திகளுக்கு அலங்காரம் செய்து சிறப்பு வழிபாடு நடந்தது.
பக்தர்களுக்கு முப்பழ பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது.