/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
டிராக்டர் பறிமுதல் டிரைவர் கைது
/
டிராக்டர் பறிமுதல் டிரைவர் கைது
ADDED : மே 23, 2025 11:20 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நரிக்குடி:நரிக்குடி பகுதியில் திருச்சுழி தாசில்தார் சிவக்குமார் தலைமையில், மண்டல துணை தாசில்தார் திருக்கண்ண முனியாண்டி, வி. ஏ. ஓ., தென்னரசு, உதவியாளர் பூமிநாதன் கொண்ட குழுவினர் நேற்று நரிக்குடி ஆர்.ஐ., அலுவலகம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது திருச்சுழி பகுதியில் இருந்து ஜல்லி கற்கள் ஏற்றி வந்த டிராக்டரை நிறுத்தி சோதனை செய்தனர். அனுமதி சீட்டு இன்றி ஏற்றி வந்தது தெரிந்தது. விசாரணையில், பரமக்குடி பிடாரி சேரியைச் சேர்ந்த மலைராஜ் 49, எனத் தெரிந்தது.
டிராக்டரை பறிமுதல் செய்து, நரிக்குடி போலீசில் ஒப்படைத்தனர். வி.ஏ.ஓ., கொடுத்த புகாரின் அடிப்படையில், டிரைவர் மலைராஜை போலீசார் கைது செய்தனர்.