/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
வியாபாரிகள் சங்க பொதுக்குழு கூட்டம்
/
வியாபாரிகள் சங்க பொதுக்குழு கூட்டம்
ADDED : ஜன 28, 2024 06:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டைதர்கா வளாகத்தில் நல்லூர் வியாபாரிகள் சங்க பொதுக்குழு கூட்டம் நடந்தது.
சங்க தலைவர் பரக்கத் முகைதீன் தலைமை வகித்தார். செயலாளர் ராமர், துணை செயலர் அப்துல் ரகுமான், பொருளாளர் ஆசிக்அலி முன்னிலை வகித்தனர். சங்க வரவு, செலவு வாசிக்கப்பட்டது.
புதிய பஸ் ஸ்டாண்ட் கட்டுமான பணிகளை விரைந்து முடிக்கவும், கிடப்பில் போடப்பட்ட இ. 3 ரோடு பணிகளை விரைந்து செயல்படுத்தவும், புதிய பஸ் ஸ்டாண்டிலிருந்து திருச்செந்தூர், சென்னைக்கு பஸ்களை இயக்க வேண்டும், இல்லையென்றால் கடையடைப்பு நடத்தப்படும் என தீர்மானிக்கப்பட்டது. துணை தலைவர் சம்சுகனி நன்றி கூறினார். - - -