ADDED : மார் 17, 2025 06:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நரிக்குடி : நரிக்குடி முள்ளிக்குடி பகுதியில் தொடர்ந்து மணல் திருட்டு நடப்பதாக வருவாய்த் துறை, போலீசாருக்கு தகவல் கிடைத்தது. ரோந்து சென்றதில் முள்ளிக்குடி வெண்கல மாதா அய்யனார் கோயில் அருகே ஏற்கனவே திருட்டுத்தனமாக மணல் அள்ளி குவித்து வைத்து மண் அள்ளும் இயந்திரம் மூலம் டிப்பர் லாரியில் அள்ளிக் கொண்டிருந்தனர்.
நரிக்குடி போலீசார் மணல் ஏற்றிய டிப்பர் லாரி, மண் அள்ளும் இயந்திரத்தை பறிமுதல் செய்தனர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி கஞ்சியநேந்தலை சேர்ந்த லாரி டிரைவர் திருமலை குபேரன் 25, அதே ஊரைச் சேர்ந்த ஜே.சி.பி., டிரைவர் பூபாலனை 25, கைது செய்தனர். லாரி, மண் அள்ளும் இயந்திர உரிமையாளர்களை போலீசார் தேடி வருகின்றனர்.