/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
நதிநீர் பாசன நிரந்தர ஆயக்கட்டுக்கு அரசாணை வெளியிட வலியுறுத்தல்
/
நதிநீர் பாசன நிரந்தர ஆயக்கட்டுக்கு அரசாணை வெளியிட வலியுறுத்தல்
நதிநீர் பாசன நிரந்தர ஆயக்கட்டுக்கு அரசாணை வெளியிட வலியுறுத்தல்
நதிநீர் பாசன நிரந்தர ஆயக்கட்டுக்கு அரசாணை வெளியிட வலியுறுத்தல்
ADDED : மே 25, 2025 05:18 AM
நரிக்குடி : நரிக்குடியில் காவிரி -வைகை கிருதுமால் -குண்டாறு பாசன விவசாயிகள் சங்க ஒன்றிய ஆலோசனைக்குழு கூட்டம் நடந்தது.
ஒன்றிய தலைவர் முருகேசன் தலைமை வகித்தார். மாவட்ட நிர்வாகிகள் இளங்கோவன், ராஜேந்திரன் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் கோபாலகிருஷ்ணன் துவக்கி வைத்தார். பருவ மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் வழங்க மாவட்ட நிர்வாகம் முறையாக கணக்கெடுப்பு நடத்த வேண்டும். ராமநாதபுரம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நடப்பாண்டு பயிர் காப்பீடு இழப்பீடு தொகை ஏக்கருக்கு ரூ. 16 ஆயிரம் கிடைத்தது போல், நரிக்குடி பகுதி விவசாயிகளுக்கும் வழங்க வேண்டும்.
கிருதுமால் நதியை மீட்டெடுக்க நதிநீர் பாசன நிரந்தர ஆயக்கட்டுக்கு அரசாணை வெளியிட கோரி வலியுறுத்துவது, விவசாயிகளை ஒன்று திரட்டி மதுரையில் கிருதுமால் பாதுகாப்பு மாநாடு நடத்துவது என்றும், ஒரு மாதத்தில் 2000 விவசாயிகளை உறுப்பினர்களாக சங்கத்தில் இணைப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஒன்றிய பொருளாளர் சுரேஷ் நன்றி கூறினார்.