/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
கட்டங்குடியில் கிராம சபை கூட்டம்
/
கட்டங்குடியில் கிராம சபை கூட்டம்
ADDED : ஜன 27, 2024 06:39 AM
அருப்புக்கோட்டை, : அருப்புக்கோட்டை அருகே கட்டங்குடியில் குடியரசு தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் கலெக்டர் ஜெயசீலன் தலைமையில் நடந்தது.
ஊராட்சி தலைவர் மகாலட்சுமி முன்னிலை வகித்தார். ஊராட்சி பகுதியில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள், மக்கள் திட்டங்கள் இயக்கம், தூய்மை பாரத இயக்கம், ஜல்ஜீவன் இயக்கம் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டது.
போதை மற்றும் புகையிலை பொருட்கள் தடுப்பு தொடர்பாகவும், தொழுநோய் விழிப்புணர்வு தொடர்பாகவும் உறுதிமொழி எடுக்கப்பட்டது.
கூட்டத்தில் மருத்துவத்துறை, வேளாண்மை, உழவர் நலம், மகளிர் சுய உதவி குழுக்கள் துறைகளின் கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டன. டி. ஆர் .ஓ .,ராஜேந்திரன், திட்ட இயக்குனர் தண்டபாணி உட்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
* சிவகாசி ஒன்றியத்தில் தேவர்குளம் ஊராட்சியில் ஊராட்சி தலைவர் முத்துவள்ளி, சித்துராஜபுரம் ஊராட்சியில் தலைவர் லீலாவதி, அனுப்பங்குளம் ஊராட்சியில் தலைவர் கவிதா, விஸ்வநத்தம் ஊராட்சியில் தலைவர் நாகராஜ், செங்கமல நாச்சியார்புரம் ஊராட்சியில் தலைவர் மாரியப்பன், நாரணாபுரம் ஊராட்சியில் தலைவர் தேவராஜன், ஆனையூர் ஊராட்சியில் தலைவர் லட்சுமி நாராயணன், பள்ளப்பட்டி ஊராட்சியில் தலைவர் ராஜபாண்டி உள்ளிட்ட பல்வேறு ஊராட்சிகளில் தலைவர்கள் தலைமையில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது. வரவு, செலவு கணக்குகள் சரிபார்க்கப்பட்டது.-

