/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
நெல் கொள்முதல் நிலையம் அமைப்பதற்காக காத்திருப்பு: சாரல் மழையால் வேதனையில் விவசாயிகள்
/
நெல் கொள்முதல் நிலையம் அமைப்பதற்காக காத்திருப்பு: சாரல் மழையால் வேதனையில் விவசாயிகள்
நெல் கொள்முதல் நிலையம் அமைப்பதற்காக காத்திருப்பு: சாரல் மழையால் வேதனையில் விவசாயிகள்
நெல் கொள்முதல் நிலையம் அமைப்பதற்காக காத்திருப்பு: சாரல் மழையால் வேதனையில் விவசாயிகள்
ADDED : மே 23, 2025 12:11 AM

விருதுநகர் மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதிகளான ஸ்ரீவில்லிபுத்துார், ராஜபாளையம், தேவதானம், சேத்துார் மற்றும் அருப்புக்கோட்டை, திருச்சுழி, சாத்துார் உள்ளிட்ட பல்வேறு நீர்வளம் உள்ள கண்மாய் பகுதிகளில் நெல் விவசாயம் அதிகமாக நடைபெற்று வருகிறது. கடந்தமுறையை போல் இந்த ஆண்டும் மழை பெய்துள்ளதால் பெரும்பான்மையான கண்மாய்கள் நீர்வரத்து பெற்று விவசாயம் அதிகரித்துள்ளது.
விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்வதற்காக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் நேரடி கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டு கொள்முதல் பணிகள் மேற்கொள்வது வழக்கம். தற்போது கோடை அறுவடை தொடங்கி உள்ள நிலையில் அரசு கொள்முதல் நிலைய திறப்பு தாமதத்தால் அரசின் நிர்ணய விலையை விட மூடை ஒன்றுக்கு ரூ.200 என வியாபாரிகள் விலை நிர்ணயித்து விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்வதற்காக படையெடுத்து வருகின்றனர்.
தற்போது மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரம் மற்றும் தென்மேற்கு பருவ மழை துவக்கம் காரணமாக சாரல் மழை துவங்கி பெய்து வருகிறது. இதன் காரணமாக அறுவடை நெல்லை விவசாயிகள் விலை குறைவாக கேட்கும் நிலையும், ஈர நெல்லை காய வைத்து பாதுகாக்கும் வசதி இல்லாத சூழலில் குறைந்த விலைக்கு விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அறுவடை நேரம் என்பதால் நெல்லை சிரமமின்றி விற்பனை செய்ய ஏற்கனவே முடிவு செய்த இடங்களில் அரசின் நேரடி கொள்முதல் நிலையம் திறப்பை விவசாயிகளின் கோரிக்கைக்கு ஏற்ப விரைந்து திறக்க வேண்டும் என எதிர்பார்த்து காத்துள்ளனர்.