/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சிறப்பு பணி பாதுகாப்பு சட்டம் இயற்றுவது எப்போது * வி.ஏ.ஓ.,க்கள் முன்னேற்ற சங்கம் கேள்வி
/
சிறப்பு பணி பாதுகாப்பு சட்டம் இயற்றுவது எப்போது * வி.ஏ.ஓ.,க்கள் முன்னேற்ற சங்கம் கேள்வி
சிறப்பு பணி பாதுகாப்பு சட்டம் இயற்றுவது எப்போது * வி.ஏ.ஓ.,க்கள் முன்னேற்ற சங்கம் கேள்வி
சிறப்பு பணி பாதுகாப்பு சட்டம் இயற்றுவது எப்போது * வி.ஏ.ஓ.,க்கள் முன்னேற்ற சங்கம் கேள்வி
ADDED : மே 23, 2025 02:06 AM

விருதுநகர்:''தமிழகத்தில் வி.ஏ.ஓ.,க்களுக்கு(கிராம நிர்வாக அலுவலர்கள்) சிறப்பு பணி பாதுகாப்பு சட்டம் இயற்றுவது எப்போது,'' என, விருதுநகரில் வி.ஏ.ஒ.,க்கள் முன்னேற்றச் சங்க மாநில தலைவர் அ.பூபதி கேள்வி எழுப்பினார்.
அவர் கூறியதாவது: கிராம நிர்வாக அமைப்பு மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர்., ஆட்சியில் உருவாக்கப்பட்டது. கிராமங்களில் முக்கிய பங்கு வகிக்கும் வி.ஏ.ஓ.,க்களுக்கு கட்டடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை. இன்றும் கழிப்பிட வசதி இல்லாத பல வி.ஏ.ஓ., அலுவலக கட்டடங்களால் பெண் வி.ஏ.ஓ.,க்கள் சிரமத்திற்கு ஆளாகின்றனர். பெரும்பாலான வி.ஏ.ஓ., அலுவலகங்களுக்கு மின் வசதி இல்லை. மின் வசதி உள்ள அலுவலகங்களுக்கும் வி.ஏ.ஓ.,க்கள் தான் மின்கட்டணம் செலுத்துகின்றனர். அலுவலக பராமரிப்பு செலவினம் தேவையான ஒன்று. ஆனால் அது வழங்கப்படுவதில்லை.
ஜமாபந்தி படியாக ஆண்டுக்கு ரூ.5 ஆயிரம் வழங்குகின்றனர். அது போதியதாக இல்லை. அலுவலக பராமரிப்பு, மின்கட்டணம் எல்லாவற்றிற்கும் ரூ.5 ஆயிரத்தை மட்டும் தருவது நியாயமல்ல. அலுவலக பராமரிப்புக்காக நகல் எடுப்பது, காகிதங்கள், பிரின்ட் அவுட் எடுப்பது பெரிய செலவாக உள்ளது.
துாத்துக்குடி மாவட்டத்தில் வி.ஏ.ஓ., லுார்து பிரான்சிஸ் கனிமவள குண்டர்களால் கொலை செய்யப்பட்டார். வி.ஏ.ஒ.,க்களுக்கு கனிமவள திருட்டை தடுப்பது தலையாய கடமை உள்ளது. டாக்டர்களுக்கு அரசு இயற்றியது போல் சிறப்பு பணி பாதுகாப்பு சட்டத்தை வி.ஏ.ஒ.,க்களுக்கும் இயற்ற வேண்டும். இந்த கோரிக்கையை ஆண்டுக்கணக்கில் வலியுறுத்தினாலும் அரசு எப்போது இயற்றும் என தெரியாது.
வி.ஏ.ஒ.,க்கள், இளநிலை உதவியாளர்கள் குரூப் 4 தேர்வு எழுதி தான் நியமிக்கப்படுகின்றனர். இளநிலை உதவியாளர்களுக்கு மூன்று ஆண்டுகளில் பதவி உயர்வு வழங்கப்படுகிறது. வி.ஏ.ஓ.,க்களுக்கு ஆறு ஆண்டுகள் பதவி உயர்வு காலம் என்பது அநீதி. சீனியாரிட்டியிலும் பட்டியலில் இறுதியில் வைக்கின்றனர். எனவே நியாயமான பதவி உயர்வு நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என்றார்.