ADDED : ஜன 09, 2024 11:59 PM

விருதுநகர் : விருதுநகர் அரசு போக்குவரத்து பணிமனை முன்பு அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் போக்குவரத்து தொழிலாளர்களின் 6 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும், வேலை நிறுத்தத்தில் அரசு பஸ்களை முறையாக பயிற்சி பெறாத வெளி நபர்களை வைத்து இயக்குவதால் பயணிகள் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்துவதை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு அண்ணா தொழிற்சங்க மண்டல செயலாளர் குருச்சந்திரன் தலைமை வகித்தார். சி.ஐ.டி.யு., மண்டல பொதுச் செயலாளர் வெள்ளைத்துரை, அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பைச் சார்ந்த தொழிலாளர்கள் பலர் பங்கேற்றனர்.
* அருப்புக்கோட்டையில் கொட்டும் மழையிலும் போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
தமிழக அரசின் முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததை வடுத்து தமிழகம் முழுவதும் பல்வேறு தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்த போராட்டம் செய்து வருகின்றனர். அருப்புக்கோட்டை அரசு போக்குவரத்து கிளை முன்பு அண்ணா தொழிற்சங்கம், சிஐடியு உள்ளிட்ட போக்குவரத்து தொழிற்சங்கத்தை சேர்ந்த தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டம் செய்து வருகின்றனர். நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கொட்டும் மழையில் தமிழக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.

