ADDED : ஜூன் 20, 2024 02:02 AM
சென்னை:தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பு:
கர்நாடகா மாநிலம் யஸ்வந்த்பூர் - சென்னை சென்ட்ரல் இரவு 10:45 மணி ரயில் நாளை, சென்டரலுக்கு பதிலாக, சென்னை கடற்கரை ரயில் நிலையத்தை சென்றடையும்
கோவை - சென்ட்ரல் இரவு 11:30 மணி ரயில், சென்ட்ரலுக்கு பதிலாக, நாளை கடற்கரை நிலையத்தை சென்றடையும்
ஆந்திரா மாநிலம், சாய் பி நிலையம் - சென்ட்ரல் இரவு 7:00 மணி ரயில், சென்ட்ரலுக்கு பதிலாக, நாளை மறுநாள் சென்னை கடற்கரை ரயில் நிலையத்தை சென்றடையும்
கோவை - சென்ட்ரல் மாலை 3:15 மணி ரயில், வரும் 26ம் தேதி வரை பெரம்பூர் வரை மட்டுமே இயக்கப்படும்
கேரளா மாநிலம் ஆலப்புழா - சென்ட்ரல் மாலை 3:20 மணி ரயில், வரும் 25ம் தேதி வரை, ஆவடி வரை மட்டுமே இயக்கப்படும்
கே.எஸ்.ஆர்., பெங்களூரு - பீஹார் மாநிலம், தானாபூர் காலை 7:50 மணி ரயில், வரும் 24ம் தேதி பெரம்பூர் வரை வந்து திரும்பி செல்லும். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு செல்லாது
சென்ட்ரல் - ஹவுரா விரைவு ரயில், வரும் 26ம் தேதி காலை 7:00 மணிக்கு பதிலாக, ஒரு மணி நேரம் 45 நிமிடங்கள் தாமதமாக காலை, 8:45 மணிக்கு புறப்பட்டு செல்லும்
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.