தஞ்சையில் நடக்கிறது 'ஸ்டார்ட் அப்' நிறுவனங்கள் கூட்டம்
தஞ்சையில் நடக்கிறது 'ஸ்டார்ட் அப்' நிறுவனங்கள் கூட்டம்
ADDED : ஜூலை 25, 2024 10:26 AM
சென்னை: தமிழக அரசின், ஸ்டார்ட் அப் டி.என்., நிறுவனம், 'ஸ்டார்ட் அப்' எனப்படும் புத்தொழில் நிறுவனங்களுக்கு உதவ மதுரை, திருநெல்வேலி, ஈரோடு, சேலம், கடலுார், கிருஷ்ணகிரி - ஓசூர், தஞ்சை ஆகிய நகரங்களில் வட்டார புத்தொழில் மையங்களை அமைத்துள்ளது.
இந்த மையங்கள் வாயிலாக, அருகில் உள்ள மூன்று - நான்கு மாவட்டங்களில் செயல்படும் புத்தொழில் நிறுவனங்களின் ஒருங்கிணைப்பு கூட்டம் நடத்தி, ஆலோசனை வழங்கப்படுகிறது.
அதன்படி, தஞ்சை மாவட்டத்தில் உள்ள மாவட்ட தொழில் மையத்தில் மதியம், காவிரி டெல்டா மாவட்டங்களில் உள்ள புத்தொழில் நிறுவனங்கள் பங்கேற்கும் கூட்டத்தை, ஸ்டார்ட் அப் டி.என்., நடத்துகிறது.
அதில், தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, நாகை ஆகிய மாவட்டங்களில் செயல்படும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களை சேர்ந்தவர்கள் பங்கேற்கலாம். அவர்களுக்கு ஏற்கனவே தொழிலில் வெற்றிகரமாக சாதித்தவர்கள் ஆலோசனைகளை வழங்குவர்.