sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ஆடி அமாவாசை வழிபாடு: தஞ்சை, நெல்லை, ராமேஸ்வரத்தில் குவிந்த கூட்டம்!

/

ஆடி அமாவாசை வழிபாடு: தஞ்சை, நெல்லை, ராமேஸ்வரத்தில் குவிந்த கூட்டம்!

ஆடி அமாவாசை வழிபாடு: தஞ்சை, நெல்லை, ராமேஸ்வரத்தில் குவிந்த கூட்டம்!

ஆடி அமாவாசை வழிபாடு: தஞ்சை, நெல்லை, ராமேஸ்வரத்தில் குவிந்த கூட்டம்!


UPDATED : ஆக 04, 2024 02:10 PM

ADDED : ஆக 04, 2024 07:58 AM

Google News

UPDATED : ஆக 04, 2024 02:10 PM ADDED : ஆக 04, 2024 07:58 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: ஆடி அமாவாசையை முன்னிட்டு, ராமேஸ்வரம், திருச்செந்தூர், திருநெல்வேலி தாமிரபரணி ஆறு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க மக்கள் குவிந்தனர்.

ஆடி அமாவாசை தினத்தில், முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதும், பசுக்களுக்கு தீவனம் மற்றும் சிரமப்படுபவர்களுக்கு உணவு வழங்குவதும் வழக்கம். இன்று (ஆகஸ்ட் 4) ஆடி அமாவாசை என்பதால், ராமேஸ்வரம் கடற்கரையில் மக்கள் குவிந்தனர்.

Image 1303167அக்னி தீர்த்த கடற்கரையில் முன்னோருக்கு தர்ப்பணம் செய்து வருகின்றனர். கோயிலில் உள்ள புண்ணிய தீர்த்தங்களில் நீண்ட வரிசையில் காத்திருந்து குளித்தனர்.Image 1303168

* தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு, புஷ்ய மண்டப படித்துறையில், ஆடி அமாவாசை முன்னிட்டு, ஏராளமானோர் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து காவிரியில் புனித நீராடினர்.

Image 1303171

* மதுரை வைகை ஆற்றில் மக்கள் தர்ப்பணம் கொடுத்து வழிபாடு நடத்தினர். ஈரோடு மாவட்டம், பவானி அருகே கூடுதுறை சங்கமேஸ்வரர் கோயிலில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.

Image 1303176

* திருச்சி, ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் காவிரி ஆற்று படித்துறையிலும் அதிகாலை முதலே பல்லாயிரக்கணக்கான பேர் தர்ப்பணம் கொடுத்து வழிபடுகின்றனர்.

Image 1303177* திருச்செந்தூர் கோவில் கடற்கரை, திருநெல்வேலியில் தாமிரபரணி ஆற்றங்கரையோரம், கன்னியாகுமரி, கோவை நொய்யல் படித்துறை உள்ளிட்ட இடங்களிலும் ஏராளமானோர் முன்னோர் வழிபாடு செய்ய கூட்டம் அலைமோதுகிறது.






      Dinamalar
      Follow us
      Arattai