UPDATED : ஜூலை 05, 2024 07:50 PM
ADDED : ஜூலை 05, 2024 07:46 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: தமிழக பா.ஜ., தலைமை அலுவலகத்திற்கு வெடி குண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
சென்னை தி.நகரில் உள்ள பா.ஜ., தலைமை அலுவலகத்திற்கு தொலைபேசி மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதனையடுத்து பா.ஜ., அலுவலகத்தில் வெடி குண்டு நிபுணர்கள் மோப்ப நாய் உதவியுடன் சோதனை நடத்தினர்.சோதனையில் அவை புரளி என தெரியவந்தது. இது குறித்து மாம்பலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.