'நிதி ஆயோக்'கூட்டம் முதல்வர் புறக்கணிப்பு : மத்திய அமைச்சர் முருகன் கண்டனம்
'நிதி ஆயோக்'கூட்டம் முதல்வர் புறக்கணிப்பு : மத்திய அமைச்சர் முருகன் கண்டனம்
ADDED : ஜூலை 24, 2024 09:17 PM

புதுடில்லி: பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிக்கப் போவதாக தெரிவித்து உள்ள முதல்வர் ஸ்டாலினுக்கு மத்திய இணை அமைச்சர் முருகன் கண்டனம் தெரிவித்து உள்ளார்.
இது குறித்து அவர் தெரிவித்து இருப்பதாவது:
பிரதமர் தலைமையில் நடைபெறவிருக்கும் 'நிதி ஆயோக்' கூட்டத்தை புறக்கணிப்பதாக தெரிவித்துள்ள, போலி ஜனநாயகத் தூதுவரான தமிழக முதல்வர் .ஸ்டாலின், இந்த அறிவிப்பின் மூலம் தமிழக மக்களை நேரடியாக வஞ்சிக்கிறார்.
அனைத்து மாநிலங்களும் தங்களுக்குத் தேவையான குறைகளை எடுத்துச் சொல்லி நிவர்த்தி பெறுகின்ற இந்தக் கூட்டத்தை புறக்கணிப்பதாகச் சொல்லி, தமிழக மக்களுக்கு துரோகம் செய்கிறார்.
உண்மையில் தமிழக மக்களின் நலன் மீது அக்கறை கொண்ட முதல்வர், இப்படியான முக்கியத்துவம் வாய்ந்த கூட்டத்தை புறக்கணிப்பது நியாயமாகுமா? இது தமிழக மக்களுக்கு இழைக்கும் அநீதி இல்லையா? இவ்வாறு முருகன் தெரிவித்துள்ளார்.