தமிழக அமைச்சரவையில் காங்., இடம் பெறணும் : கார்த்தி சிதம்பரம்
தமிழக அமைச்சரவையில் காங்., இடம் பெறணும் : கார்த்தி சிதம்பரம்
UPDATED : ஜூலை 20, 2024 10:49 PM
ADDED : ஜூலை 20, 2024 10:43 PM

தமிழக அமைச்சரவையில் காங்., இடம் பெற வேண்டும் என சிவகங்கை தொகுதி எம்.பி.,யான கார்த்தி சிதம்பரம் கூறினார்.
புதுக்கோட்டையில் நடந்த காங்., செயல் வீரர்கள் கூட்டத்தில்அவர் கூறியதாவது: அரசியலில் ஆளும் கட்சிஒன்று இருக்கிறது. எதிர்கட்சி ஒன்று இருக்கிறது. இப்படி இரண்டு பக்கமும் இல்லாமல் இரண்டாங்கெட்ட கட்சியாக காங்., இருக்கிறது.
வி.சி., கம்யூ.,கட்சிகளுக்கு இருக்கிற உரிமை நமக்கு இல்லையா? நாமும் நம்முடைய கருத்தை பதிவு செய்ய வேண்டும். அப்போது தான் மக்கள் நம்மை திரும்பி பார்ப்பார்கள். நாம் கூட்டணியை மதிக்கிறோம்.திமுக கூட்டணியில் தான் இருக்கிறோம், அதன் திட்டங்களை மதிக்கிறோம். அதே நேரத்தில் நாம் பொதுப்பிரச்னைகளில் பேச தயக்கம் காட்டுகிறோம்.இனி தயக்கம் காட்ட கூடாது.
நம்கட்சியை சேர்ந்த நெல்லை மாவட்ட நிர்வாகி ஜெயக்குமார் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் இது வரையில் ஒருவரை கூட போலீசார் கைது செய்யவில்லை.இதனை பேசாமல் எப்படி இருக்க முடியும். குற்றவாளிகள் மீதான என்கவுன்டர் கண்டிக்க வேண்டும். கேசை முடிப்பதற்காக தான் என்கவுன்டர் செய்கிறார்கள் . இதனை பேசும்போது மின் கட்டணத்தை பற்றியும் நாம் பேசியாக வேண்டும்.
2029-ல் பார்லி தேர்தலுக்கு முன்பாக 2026-ல்தமிழக சட்டசபை தேர்தலும் நடைபெற உள்ளது. அப்போது தமிழக அமைச்சரவையிலும் காங்., இடம் பெற வேண்டும். இவ்வாறு கார்த்தி சிதம்பரம் கூறினார்.