தி.மு.க., பிரமுகரின் அவதூறு பேச்சு: டி.ஜி.பி.,க்கு மகளிர் ஆணையம் நோட்டீஸ்
தி.மு.க., பிரமுகரின் அவதூறு பேச்சு: டி.ஜி.பி.,க்கு மகளிர் ஆணையம் நோட்டீஸ்
UPDATED : ஜூன் 23, 2024 03:06 PM
ADDED : ஜூன் 23, 2024 02:21 PM

சென்னை: மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் குறித்து அவதூறாக பேசிய தி.மு.க., பேச்சாளர் இனியவன் மீதான நடவடிக்கை குறித் விளக்கம் கேட்டு என தேசிய மகளிர் ஆணையம் தமிழக டி.ஜி.பி.,க்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
சென்னை பெருங்குடியில் கடந்த ஜூன் 17ம் தேதி தி.மு.க., சார்பில் நடைபெற்ற கூட்டத்தில், பேச்சாளர் இனியவன், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குறித்து தரக்குறைவாகவும், அவதூறாகவும் பேசினார். தி.மு.க., பேச்சாளர் இனியவன் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என டி.ஜி.பி., அலுவலகத்தில் தமிழக பா.ஜ., மாநில துணைத் தலைவர் கரு.நாகராஜன் புகார் மனு அளித்து இருந்தார்.
இந்நிலையில், இன்று(ஜூன் 22) தி.மு.க., பேச்சாளர் இனியவன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து தேசிய மகளிர் ஆணையம் விளக்கம் கேட்டு தமிழக டி.ஜி.பி.,க்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. 3 நாட்களில் அறிக்கை அளிக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.