ADDED : ஜூன் 08, 2024 01:41 AM

தமிழகத்தில் குறு, சிறு தொழில்கள் அதிகம் நிறைந்துள்ளன. அவை, மின்கட்டண உயர்வால் பாதிக்கப்பட்டு வருகின்றன. மின் கட்டணத்தில், நிலை கட்டணத்தை கிலோ வாட்டிற்கு, 430 சதவீதம் உயர்த்தியதை திரும்பப் பெற வேண்டும்.
உச்சநேர மின் கட்டணத்தை கைவிடுவது உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு, லோக்சபா தேர்தலில், கோவை தொகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த அமைச்சர் ராஜாவிடம் வலியுறுத்தப்பட்டது. இதே கோரிக்கைகள் பிரசாரத்திற்கு வந்த முதல்வர் ஸ்டாலினிடமும் தெரிவிக்கப்பட்டது. இருவரும், எங்கள் கோரிக்கை கள் மீது தீர்வு காண்பதாக தெரிவித்தனர்.
தேர்தலில், தி.மு.க., கூட்டணி அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. எனவே, வாக்குறுதி அளித்தபடி, தொழில்களை பாதுகாக்க மின்சார நிலை கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும். மேலும், அடுத்த மாதம் முதல் மின் கட்டணத்தையும் உயர்த்தக் கூடாது.
- ஜே.ஜேம்ஸ்
ஒருங்கிணைப்பாளர், தமிழ்நாடு தொழில்துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பு