ADDED : ஜூன் 01, 2024 08:50 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:'நபார்டு' எனப்படும், தேசிய வேளாண் மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியின், தமிழகம் மற்றும் புதுச்சேரி மண்டல தலைமை பொது மேலாளராக ரா.ஆனந்த் பொறுப்பேற்றுள்ளார்.
கடந்த, 1993ல் மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நபார்டு வங்கியில் சேர்ந்த அவர், 30 ஆண்டு களாக பல்வேறு மாநிலங்களில், பல பொறுப்புகளில் பணியாற்றியுள்ளார்.
வேளாண் மேம்பாடு, ஊரக வளர்ச்சி, சிறு தொழில், நெசவு உள்ளிட்ட துறைகளில் உயர் பதவிகளை வகித்த ஆனந்த், புதுக்கோட்டை மாவட்டத்தில் மேலாளராக பணியாற்றும் போது, ஊரக வாழ்வாதார மேம்பாடு, திறன் மேம்பாடு போன்றவற்றில் அதிக கவனம் செலுத்தி, சிறப்பாக பணியாற்றி உள்ளார்.