ADDED : ஜூலை 16, 2024 01:43 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: அஞ்சல் துறையில் கிளை அஞ்சல் அதிகாரி, துணை கிளை அஞ்சல் அதிகாரி, கிராமிய அஞ்சல் ஊழியர் என, 44,228 பணியிடங்களுக்கு, நாட்டின் பல்வேறு இடங்களில் இருந்து ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18 முதல் 40 வயதுக்கு உட்பட்டவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க ஆக., 5 கடைசி நாள்.
கூடுதல் விபரங்களை www.indiapostgdsonline.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.