ADDED : ஜூலை 11, 2024 02:50 AM
சென்னை:மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், டில்லியில் நேற்று, மத்திய தொழிற்சங்க நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதில் எட்டு தொழிற்சங்கங்களின் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
இது குறித்து தொ.மு.ச., பொருளாளர் நடராஜன் கூறியதாவது:
நிதி அமைச்சருடன் நடந்தகூட்டத்தில் சில கோரிக்கைகளை முன்வைத்தோம். அதில், 'மாத வருவாய் பிரிவினரின் வருமான வரி வரம்பு மற்றும் வரியில்லா பிரிவை கணிசமாக உயர்த்த வேண்டும். ரயில்வே உள்ளிட்ட மத்திய பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். பழைய பென்ஷன் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். 'ரயில்வே, ராணுவ உற்பத்தி தொழிற்சாலைகள், துறைமுகம், பி.எஸ்.என்.எல்., உள்ளிட்ட பொதுத் துறைகளை தனியார்மயமாக்கும் திட்டத்தை கைவிட வேண்டும்' உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினோம்.
இவ்வாறு அவர் கூறினார்.