ADDED : ஜூலை 18, 2024 02:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:'மக்கள் குறைகள், மனு வழங்கிய 15 நாட்களில் தீர்க்கப்படுகின்றன. விரைவில் 80,000 பேருக்கு முதியோர் உதவித் தொகை வழங்கப்பட உள்ளது' என, தமிழக அரசு தெரிவித்துள்ளது.
அரசு அறிக்கை:
தி.மு.க., ஆட்சிக்கு வந்தபின், முதியோர் உதவித்தொகை, 1000 ரூபாயில் இருந்து, 1200 ரூபாயாகவும், மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை 1000 ரூபாயில் இருந்து, 1500 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டது.
கடந்த மூன்று ஆண்டுகளில், 85,000 பேருக்கு, முதியோர் உதவித் தொகை கூடுதலாக வழங்கப்படுகிறது. மேலும் 80,000 பேருக்கு விரைவில் வழங்கப்பட உள்ளது. இதற்காக 5337 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
முதல்வர் திட்டம் உட்பட பல்வேறு திட்டங்களில் பெறப்படும் மக்களின் மனுக்கள், 15 நாட்களில் தீர்க்கப்படுகின்றன.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.