ADDED : ஜூலை 14, 2024 12:41 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: தமிழகத்தில் இருந்து, இலங்கை மற்றும் நேபாளம் செல்ல, இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகமான ஐ.ஆர்.சி.டி.சி., விமான சுற்றுலா வுக்கு ஏற்பாடு செய்துள்ளது. சென்னை மற்றும் திருச்சியில் இருந்து, இந்த சுற்றுலா விமானங்கள் இயக்கப்பட உள்ளன.
திருச்சியில் இருந்து ஆக., 11ம் தேதி காஷ்மீருக்கும்; சென்னையில் இருந்து காஷ்மீர், குஜராத், புவனேஸ்வர், ஹரித்வார், நேபாளம், பூடான், இலங்கை உட்பட பல்வேறு இடங்களுக்கும் விமான சுற்றுலா செல்லலாம்.
ஒவ்வொரு சுற்றுலாவும், 5 முதல் 8 நாட்கள் வரை இருக்கும். அதுபோல், கட்டணமும் 43,000 முதல் அதிகபட்மாக 92,000 ரூபாய் வரை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. மேலும் தகவல்களை பெற 82879 31968, 82879 32122 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.