ADDED : ஜன 26, 2024 01:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:பிற்படுத்தப்பட்டோர் நலப் பள்ளி, கல்லுாரி விடுதி மாணவர் உணவுக் கட்டணத்தை உயர்த்தி வழங்க, அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
பள்ளி விடுதி மாணவர் உணவு கட்டணம், ஒருவருக்கு மாதம் 1,000 ரூபாய் என்பதை 1,400 ரூபாயாகவும், கல்லுாரி மாணவ - மாணவியருக்கான உணவு கட்டணம், 1,100 ரூபாய் என்பது 1,500 ரூபாயாகவும் உயர்த்தப்படும் என, பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அறிவித்தது.
அதன்படி, கடந்த அக்டோபர் முதல், இந்த ஆண்டு மார்ச் வரையிலான, ஆறு மாதங்களுக்கு ஏற்படும் கூடுதல் செலவு, 19.97 கோடி ரூபாயை கேட்டு, அரசுக்கு கடிதம் எழுதப்பட்டது.
இதை பரிசீலனை செய்த அரசு, உயர்த்தப்பட்ட உணவுக் கட்டணத்தை, இம்மாதம் 23ம் தேதி முதல் வழங்க ஒப்புதல் அளித்து, 9.56 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி உள்ளது.

