ADDED : ஜன 27, 2024 02:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:துாத்துக்குடி அனல் மின் நிலையத்தில் தலா 210 மெகா வாட் திறனில் ஐந்து அலகுகளில் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. அதில் மூன்றாவது அலகில் 'பாய்லர் டியூப் பஞ்சர்' காரணமாக நேற்று முன்தினம் இரவு முதல் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது.
இதே பிரச்னையால் சென்னையில் உள்ள வடசென்னை அனல் மின் நிலையத்தில் 210 மெகா வாட் திறன் உடைய இரண்டாவது அலகில் நேற்று முன்தினம் இரவு முதல் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.

