sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 14, 2025 ,ஆவணி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

273 சேவை மையங்கள் திறக்கப்படும் மாற்றுத்திறனாளிகள் துறை செயலர் தகவல் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலர் தகவல்

/

273 சேவை மையங்கள் திறக்கப்படும் மாற்றுத்திறனாளிகள் துறை செயலர் தகவல் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலர் தகவல்

273 சேவை மையங்கள் திறக்கப்படும் மாற்றுத்திறனாளிகள் துறை செயலர் தகவல் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலர் தகவல்

273 சேவை மையங்கள் திறக்கப்படும் மாற்றுத்திறனாளிகள் துறை செயலர் தகவல் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலர் தகவல்


ADDED : ஜூன் 13, 2025 01:19 AM

Google News

ADDED : ஜூன் 13, 2025 01:19 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:''நடப்பாண்டுக்குள் அனைத்து மாவட்டங்களிலும், மாற்றுத்திறனாளிகளுக்காக 273 சேவை மையங்கள் திறக்கப்படும்,'' என, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலர் மதுமதி தெரிவித்தார்.

மாற்றுத்திறனாளிகளுக்காக, 'டெக் பார் ஆல் - 2025' என்ற பெயரில், தொழில்நுட்ப உதவி உபகரண கண்காட்சி, சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கில் இரண்டு நாட்கள் நடக்கிறது. இதன் துவக்க விழா நேற்று நடந்தது.

கண்காட்சியில், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் நவீன உபகரணங்களை தயாரிக்கும் 48 நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன. மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலர் மதுமதி, இயக்குநர் லட்சுமி ஆகியோர் கண்காட்சியை துவக்கி வைத்தனர்.

கண்காட்சியில், நொய்டாவை சேர்ந்த, 'ஷாப் பார் ஸ்பெஷல்ஸ்' என்ற நிறுவனம், பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்காக, செயற்கை நுண்ணறிவு வாயிலாக இயங்கக்கூடிய, 'ஹார்க் ஏ.ஐ., இன்ஸ்டன்ட் ரீடர்' என்ற கருவியை பார்வைக்கு வைத்துள்ளது.

இக்கருவி, பி.டி.எப்., நாளிதழ், லெட்டர் போன்றவற்றை ஸ்கேன் செய்து, அதில் உள்ள வாசகங்களை தெரிவிக்கிறது.

இக்கருவி, 250க்கும் மேற்பட்ட மொழிகளை படிக்கவும், மொழிபெயர்க்கவும் செய்யும். கண்காட்சியில், 5,000 முதல் 5 லட்சம் ரூபாய் வரையிலான நவீன உபகரணங்கள் உள்ளன.

கண்காட்சியை துவக்கி வைத்த பின், மதுமதி அளித்த பேட்டி:

தமிழகத்தில் முதல்முறையாக, மாற்றுத்திறனாளிகளுக்கான தொழில்நுட்ப உதவி உபகரண கண்காட்சி நடக்கிறது. தற்போது, மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு நடந்து வருகிறது; அவர்களுக்கு, 'டி.என்., ரைட்ஸ்' திட்டம் வாயிலாக, மறுவாழ்வு சிகிச்சை வழங்கப்படுகிறது.

இதன் வாயிலாக, பல மாற்றுத்திறனாளிகள் தாங்களாகவே எழுந்து நடக்கக்கூடிய அளவிற்கு முன்னேற்றம் அடைந்துள்ளனர். ஏற்கனவே, சென்னையில் மாற்றுத்திறனாளிகள் வீடுகளுக்கு சென்று மறுவாழ்வு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.

அவர்களுக்கு வழங்கப்படும், சிறப்பு கல்வி, பார்வை மதிப்பீடு, கேட்டல் மற்றும் பேச்சு சிகிச்சை, பிசியோதெரபி, தொழில் சிகிச்சை மற்றும் உளவியல் ஆலோசனை உள்ளிட்ட ஆறு சிறப்பு மறுவாழ்வு சேவைகளை ஒருங்கிணைத்து வழங்க, அனைத்து மாவட்டங்களிலும், 'ஒன் ஸ்டாப் சென்டர்' என்ற பெயரில் சேவை மையம் திறக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

10 மடங்கு விலை குறைவு


கண்காட்சியில் சென்னையை சேர்ந்த, 'சிம்பையோனிக்' நிறுவனம் அரங்கு அமைத்துள்ளது. இது குறித்து, அந்நிறுவனத்தின் இணை நிறுவனர் ரிஷி கிருஷ்ணா, 30, கூறியதாவது: கடந்த 2018ல் நடந்த விபத்தில், முழங்கையை இழந்தேன். ரோபாடிக் கை பொருத்த முயற்சித்தேன். அதன் விலை 30 லட்சம் ரூபாயாக இருந்தது. பின், நானும், என் நண்பரும் இணைந்து, என் போன்று கையை இழந்தவர்களுக்கு, தொழில்நுட்பம் வாயிலாக உதவ முடிவு செய்தோம். தினசரி தேவைகளுக்கேற்ப கைகள் இழந்தவர்களுக்கான, பைக் ரைடிங், நீச்சல், புஷ் அப், புல் அப் உள்ளிட்ட உடற்பயிற்சிகளுக்கு உதவும் உபகரணங்களை தயாரித்தோம். ஐந்து ஆண்டுகளுக்கு முன் நிறுவனத்தை துவக்கி ஆறு மாதங்களாக உபகரணங்களை விற்கிறோம். வெளிச்சந்தையை விட 10 மடங்கு குறைவான விலையில் விற்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.








      Dinamalar
      Follow us