ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை; கடன் தொல்லையால் விபரீதம்
ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை; கடன் தொல்லையால் விபரீதம்
ADDED : மார் 13, 2025 09:25 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: சென்னை திருமங்கலத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை திருமங்கலம் பகுதியில் டாக்டர் பாலமுருகன்,52, அவரது மனைவி சுமதி 47, மகன்கள் ஜெஷ்வந்த்குமார்,19, லிங்கேஸ்வரன்,17, ஆகிய 4 பேர் தற்கொலை செய்து கொண்டனர். இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்தில் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்டது போலீசார் விசாரணையில் தெரியவந்தது. டாக்டர் பாலமுருகன் ரூ.5 கோடி மேல் கடன் தொல்லையால் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளதாக தெரிகிறது.