ADDED : ஜன 11, 2024 10:32 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:தை மாதம் என்பதால், பொங்கல் பண்டிகை விடுமுறை முடிந்த பின், ஜன., 18 முதல், 31 வரையிலான நாட்களில் பத்திரப்பதிவு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்காக, ஜன., 31 வரை, அனைத்து வேலை நாட்களிலும் பத்திரப்பதிவுக்கு கூடுதல் டோக்கன்கள் வழங்கப்படும்.
ஒரு சார் - பதிவாளர் உள்ள அலுவலகங்களில், கூடுதலாக 50 டோக்கன்கள்; இரண்டு சார் - பதிவாளர் உள்ள அலுவலகங்களில், கூடுதலாக 100 டோக்கன்கள் வழங்கப்படும் என, பதிவுத்துறை செயலர் ஜோதி நிர்மலா சாமி உத்தரவிட்டுள்ளார்.

