சிறிய பந்து தொண்டையில் சிக்கி 8 மாத ஆண் குழந்தை உயிரிழப்பு
சிறிய பந்து தொண்டையில் சிக்கி 8 மாத ஆண் குழந்தை உயிரிழப்பு
ADDED : ஆக 04, 2024 10:21 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவள்ளூர்: திருவள்ளூரில் சிறிய பந்து தொண்டைக்குள் சிக்கியதில், 8 மாத ஆண் குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர், பழவேற்காடு அருகே அரங்கன்குப்பம் பகுதியில் அஜீத்குமார் வசித்து வந்தார். இவரது 8 மாதமே நிரம்பிய ஆண் குழந்தை சர்வேஷை வீட்டில் படுக்க வைத்து விட்டு, பெற்றோர் வீட்டு வேலையில் ஈடுபட்டனர். குழந்தைக்கு விளையாட சிறிய பந்து ஒன்றை கொடுத்திருந்தனர். அதை வைத்து விளையாடிக் கொண்டிருந்த குழந்தை, பெற்றோர் கவனிக்காதபோது விழுங்கி விட்டது.
மூச்சுத்திணறல் ஏற்பட்டு அழுதபோது தான், பெற்றோருக்கு விஷயம் புரிந்தது. பந்தை எடுக்க முயற்சித்தனர். முடியவில்லை. மருத்துவமனை கொண்டு செல்வதற்குள் சர்வேஷ் உயிரிழந்தார்.