ADDED : ஜன 26, 2024 02:14 AM
சென்னை:மேற்கு ஆஸ்திரேலியாவை சேர்ந்த உயர் அலுவல் துாது குழுவினர் நேற்று, தலைமைச் செயலகத்தில், அமைச்சர் உதயநிதியை சந்தித்து பேசினர்.
மேற்கு ஆஸ்திரேலியா துணை முதல்வர் ரீட்டா சபியோட்டி பஸ், முதல்வரின் பார்லிமென்ட் செயலர் ஜெகதீஷ் கிருஷ்ணன், துணை முதல்வரின் மூத்த ஆலோசகர் ராபி வில்லியம்சன், முதலீடு மற்றும் வர்த்தக கமிஷனர் நஷித் சவுத்ரி, இயக்குனர் கிளியோனா ஜேம்ஸ், வர்த்தக மேம்பாட்டு மேலாளர் சுவாதி பாலசுப்பிரமணியன் ஆகியோர், துாதுக் குழுவில் இடம் பெற்றிருந்தனர்.
சந்திப்பின்போது, மேற்கு ஆஸ்திரேலியா மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் இணைந்து செயலாற்றுவதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து ஆராயப்பட்டன.
வளர்ந்து வரும் திறன் தேவைகளுக்கு ஏற்ப, இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்க, பயிற்சியாளர்களை தயார் செய்யும் திட்டங்களை உருவாக்குவதே, இதன் நோக்கம்.

