ADDED : ஜூன் 16, 2025 05:24 AM
வத்தலக்குண்டு: திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு மின் செயற்பொறியாளர் கம்ப்யூட்டரில் மே 14ல், அலுவலகத்தில் பணிபுரியும் பெண் அலுவலர்கள் சிலர் குறித்து ஆபாசமாக சித்தரித்தும், இந்த அலுவலகத்திற்கு கீழ் உள்ள மற்ற துணை அலுவலங்களுக்கு செல்லும் வகையில் ஆபாச மெயில் அனுப்பப்பட்டது.
இந்த ஆபாச மெயில் குறித்து சம்பந்தப்பட்ட பெண் அலுவலர்கள் வத்தலக்குண்டு செயற்பொறியாளர், போலீஸ் ஸ்டேஷன், தமிழக முதல்வரின் தனிப்பிரிவு, மேற்பார்வை பொறியாளருக்கு புகார் அளித்தனர்.
மாவட்ட எஸ்.பி., அறிவுறுத்தலின்படி, புகாரை பெற்ற சைபர் கிரைம் போலீசார், செயற்பொறியாளர் அலுவலகத்தில் உள்ள கம்ப்யூட்டர்களை ஆய்வு செய்தனர். இதுதொடர்பான ஆதாரங்களையும் எடுத்துச்சென்றனர். தொடர்ந்து அய்யம்பாளையம் துணைமின் நிலைய இளநிலை மின் பொறியாளர் பாஸ்கரன் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.