ADDED : பிப் 29, 2024 08:47 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை:திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகே மன்னார்கோவில் பெரியநம்பி நரசிம்ம கோபாலன். உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் 2018ல் தாக்கல் செய்த பொதுநல மனு:
அறநிலையத்துறையின் கீழ் உள்ள பாரம்பரிய கோவில்கள், அவற்றின் சொத்துக்கள் விபரங்களை அரசின் இணையதளத்தில் வெளியிட வேண்டும். இதனால் வெளிப்படைத் தன்மை ஏற்படும். அறநிலையத்துறை கமிஷனர், செயலருக்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு குறிப்பிட்டார்.
தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா, நீதிபதி பி.தனபால் அமர்வு: மனுதாரர் அதே அதிகாரிகளிடம் புதிதாக மனு அளிக்க வேண்டும். அதை பரிசீலித்து 9 மாதங்களில் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

