sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, பிப்ரவரி 28, 2026 ,மாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

பெல்ஜியம் நிறுவனத்தில் சி.பி.ஐ., அதிகாரிகள் சோதனை

/

பெல்ஜியம் நிறுவனத்தில் சி.பி.ஐ., அதிகாரிகள் சோதனை

பெல்ஜியம் நிறுவனத்தில் சி.பி.ஐ., அதிகாரிகள் சோதனை

பெல்ஜியம் நிறுவனத்தில் சி.பி.ஐ., அதிகாரிகள் சோதனை


ADDED : ஜூன் 21, 2025 02:07 AM

Google News

ADDED : ஜூன் 21, 2025 02:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:பண மோசடி தொடர்பாக, சென்னையில் உள்ள பெல்ஜியம் நிறுவனம் மற்றும் கட்டுமான தொழில் அதிபர் வீட்டில், சி.பி.ஐ., அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.

சென்னை அண்ணா சாலையில் தேனாம்பேட்டை அருகே, ஜான் டி நுல் குழுமம் என்ற பெல்ஜியம் நிறுவனத்தின் அலுவலகம் செயல்படுகிறது.

இந்நிறுவனம், கடல்சார் தொழில்கள் மற்றும் கட்டுமானம், அகழ்வாராய்ச்சி, காற்றாலை தொடர்பான தொழில்களில் ஈடுபட்டு வருகிறது. இக்குழுமத்திடம், 40க்கும் மேற்பட்ட கப்பல்கள் இருப்பதாக கூறப்படுகிறது.

மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில், சி.பி.ஐ., அதிகரிகள் பண மோசடி தொடர்பாக பதிவு செய்த வழக்கில், ஜான் டி நுல் குழுமம் சிக்கி உள்ளது.

இதன் காரணமாக, சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அக்குழுமத்தின் அலுவலகத்தில், மும்பை சி.பி.ஐ., அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். அதேபோல, சென்னை சூளைமேடு பஜனை கோவில் தெருவில், பிரமாண்டமான சொகுசு பங்களாவில் சுகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர், கட்டுமான தொழிலில் ஈடுபட்டுள்ளார்.

இவர் மீதும், சி.பி.ஐ., அதிகாரிகள் வங்கி கடன் மோசடி வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

அதன் அடிப்படையில், சுகுமார் வீட்டில் நேற்று சோதனை நடத்தினர். சுகுமார், முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்தின் உறவினர் என்று கூறப்படுகிறது.






      Dinamalar