'நீட்' தேர்வு பயிற்சியுடன் பிளஸ் 1, பிளஸ் 2 படிக்க சென்னை, காஞ்சியில் மையம்
'நீட்' தேர்வு பயிற்சியுடன் பிளஸ் 1, பிளஸ் 2 படிக்க சென்னை, காஞ்சியில் மையம்
ADDED : ஜூன் 07, 2025 01:00 AM
சென்னை:ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் வைத்ய சாஸ்த்ர பிரவேச பாடசாலையின், 'பஞ்ச திராவிட பிராமண சபா'வின் வாயிலாக, அந்தண மாணவர்களுக்கு, மருத்துவ படிப்புக்கான 'நீட்' தேர்வு பயிற்சியுடன், பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகள் படிக்க, சென்னை மற்றும் காஞ்சிபுரத்தில் சிறப்பு மையங்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன.
பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற, ஆன்மிகம், அறிவியலில் விருப்பம் உள்ள அந்தண மாணவர்கள், bspd.che@gmail.com என்ற இ - மெயில் முகவரியில், வரும் 10ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
தங்குமிடம், உணவு வசதியுடன் கூடிய இந்த மையங்களில், தேசிய திறந்தநிலை பள்ளி என்.ஐ.ஓ.எஸ்., பாடத்திட்ட முறையில், சிறந்த ஆசிரியர்களை கொண்டு கல்வி அளிக்கப்படும். இங்கு படிக்கும் மாணவர்களுக்கு ஊக்கத் தொகையும் வழங்கப்படும்.
மாணவரின் பெயர், பெற்றோர் பெயர், முகவரி, மொபைல் போன் எண், ஆதார் எண், வருமானச் சான்றிதழ், 10ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் ஆகியவற்றுடன் விண்ணப்பிக்க வேண்டும் என, ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் வைத்ய சாஸ்த்ர பிரவேச பாடசாலை அறிவித்துள்ளது.