ADDED : ஜூலை 05, 2025 06:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், 'மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில், இன்று முதல் 10ம் தேதி வரை, ஒருசில இடங்களில், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
இன்று, கோவை, நீலகிரி மாவட்டத்தின் மலைப் பகுதிகளில், கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மீனவர்களுக்கு இன்று முதல் 8ம் தேதி வரை, எச்சரிக்கை ஏதுமில்லை.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.